ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமராக மீண்டும் தேர்வு

 


 


 


கனடா பிரதமராக மீண்டும் தேர்வு பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


 


கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 338 உறுப்பினர்களை கொண்ட கனடா மக்களவைக்கு தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றுள்ளது.


 


லிபரல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் சிறு கட்சிகளுடன் இணைந்து ஜஸ்டின் ட்ரூடோ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்.. , கனடா பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 


தனது டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ஜனநாயகத்தின் மீதான அர்ப்பணிப்பு, மதிப்புகள் மற்றும் பன்முகத்தன்மை  ஆகியவைகளால் இந்தியாவும் கனடாவும் இணைக்கப்படுகின்றன. ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எனது வாழ்த்துக்கள். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,