நம்ம வீட்டுப்பிள்ளை திரை விமர்சனம்

குடும்ப பாங்கான படங்களை அபூர்வமாக பார்க்குஙம காலத்தில் அண்ணன்-தங்கை செட்டிமென்ட்டை வைத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து எடுக்கப்பட்ட படம் நம்ம வீட்டுப் பிள்ளை. அப்பா இல்லாத சிவகார்த்திகேயன் பெரிய குடும்பத்தில் எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் முதல் ஆளாக தோள் கொடுத்து அனைத்து சொந்த பந்தங்களையும் விட்டுக் கொடுக்காமல் முறை செய்கிறார். ஆனால், அவருக்கு அப்பா இல்லை என்பதால் மற்ற அனைவருமே அவரை குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதில்லை, மிக பிரியமான தங்கையான ஐஸ்வர்யா ராஜேஸைக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ஊர் முழுவதும் சுற்றினாலும் யாருமே கட்டிக்கொள்ள முன்வராத போது நட்டி அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். நட்டி முன்வருவது சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே இருக்கும் ஒரு பகைக்காக தான், அது தெரியாமல் தங்கையை கட்டிக்கொடுக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்கள் சிவகார்த்திகேயன் தங்கைக்காக இறங்கும் பாசப்போராட்டமே நம்ம வீட்டுப் பிள்ளை.கதை


சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற படம்தான் இதில் பொறுப்பான பையனாக, அண்ணனாக, மச்சானாக நம்மையுத் தாய்மார்களையும் கவர்கிறார் கிளைமேக்ஸ் எமோஷ்னல் காட்சிகள் ஆடியன்ஸ் கண்களை குளமாக்குகிறது . ஐஸ்வர்யா ராஜேஸ் அசத்தல் நடிப்பு, பாரதிராஜா, அர்ச்சனா, சூரி, வேலாராமமூர்த்தி, சுப்பு, நட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே தங்கள் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். பாண்டிராஜ் படம் என்றாலே ஒரு சில கதாபாத்திரம் போகிற போக்கில் நல்லது செய்துவிட்டு செல்லும். இதில் சூரியின் மகனாக வரும் பாண்டிராஜின் ரியல் லைப் மகன் செய்கின்றார். முந்திரிகுட்டை என்ற கதாபாத்திரத்தில் அவர் அடிக்கும் கவுண்டர் வசனம் க்ளாப்ஸ் அள்ளுகிறது. செண்டிமெண்ட் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது பட சம்பவங்கள் நமக்கு ஏற்கனவே பார்த்த பல படங்களின் கதை போலவே உள்ளதால், இது தான் நடக்கபோகிறது என்று யூகித்துக்கொள்ளமுடிகிறது முடிந்தாலும் திரைக்கதையை முடிந்த அளவிற்கு இன்றைய ட்ரெண்ட் ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்துள்ளதையும் கிராமிய பிண்ணனியில் அமைந்து நம்மை ஒரு கிராமத்திற்கே சென்று வந்ததது போல அமைத்துள்ளதும் பாண்டிராஜின் மிகப்பெரிய வெற்றி


. படத்தில் மிகவும் தள்ளி நிற்பது, அனு இமானுவெல் கதாபாத்திரம் தான். ஏதோ பாடலுக்காக சேர்த்தது போல் தான் உள்ளது,. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு தமிழகத்தின் தென் மாவட்டங்களை மிக அழகாக நம் கண்முன் கொண்டு வருகிறது . டி.இமானும் தன் பங்கிற்கு கிராமிய இசை மற்றும் அவருடைய வழக்கமான சில இசைகளை சேர்த்து ஸ்கோர் செய்துவிட்டார்., குடும்ப உறவுகள் குறித்த வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. படத்தின் இரண்டாம் பாதியை இதுதான் நடக்கப்போகிறது என யூகிக்கமுடிவதால் சுவாராஸ்யம் இல்லாமல் படம் நகர்கிறது குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டுப்பிள்ளை,


 -ஜெயந்தி சம்பந்தன்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி