விளையாட்டு

கடைசி டெஸ்டிலும்   இந்திய அணி  வெற்றி

ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில்  இந்திய அணி  வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 19-ந்தேதி தொடங்கிய இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிpயில்  'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 497 ரன்களில் 'டிக்ளேர்' செய்தது .. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்களில் முடங்கி 'பாலோ-ஆன்' ஆனது. 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு சென்று

நேற்றைய 4-வது நாளில்  வெறும் 11 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 48 ஓவர்களில் 133 ரன்களில் சுருண்டது. நடப்பு தொடரில் தென்ஆப்பிரிக்காவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஷபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டும்,

ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். மூலம் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்த இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 11-வது தொடர் இதுவாகும். மேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒரு டிராவுக்கு கூட இடம் கொடுக்காமல் முழுமையாக கைப்பற்றி 'ஒயிட்வாஷ்' செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு இரட்டை சதம், 2 சதம் உள்பட 529 ரன்கள் சேர்த்து தொடரில் முதலிடம் பிடித்தார். இதில் 19 சிக்சர்களும் அடங்கும். அவரே ஆட்டநாயகன் (ரூ.1 லட்சம் பரிசு) மற்றும் தொடர்நாயகன் விருதுகளை (ரூ.2½ லட்சம் பரிசு) தட்டிச் சென்றார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,