நவராத்திரி திருவிழா

 


துபாயில் நவராத்திரி(பகுதி 1 )  ஐக்கிய அரபு எமிரேட்டுகள் என்றால் பலருக்கும் தெரியாது.


இதே துபாய்  ,அபுதாபி ஷார்ஜாஹ் என்றால் எல்லாரும் அறிவர்துபாய் , அபுதாபி ஷார்ஜாஹ் இவை அனைத்துமே  ஐக்கிய அரபு எமிரேட்டுகள் நாட்டின் அங்கமாகும். பாலைவன பிரதேசமான இந்த நாடு நல்ல ஆட்சியாளர்களால் இன்று உலகையே பிரமிக்கும் பிரதேசமாக மாறியுள்ளது. இதில் மற்ற நாட்டில் இருந்து குடிபெயர்ந்த மக்களின் உழைப்பும் அடங்கி உள்ளது. இதை நன்கு அறிந்த இந்நாட்டு மக்கள், அனைவரையும் அரவணைத்தே செல்கின்றனர்


   இஸ்லாமிய தேசமாகினும், இங்கே மற்ற மதத்தவர்களின் வழிபாடுகளுக்கும் விழாக்களுக்கும் தடை இருந்ததில்லை. இங்கு இருக்கும் மற்ற நாட்டவர்களின் பெரும்பான்மை நம் நாட்டு மக்களே. இவர்கள் சிறு குழுக்களாக எல்லா பண்டிகைகளையும் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த நவராத்திரி விழா இங்கு பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைவரது இல்லங்களிலும் கொலு வைக்கப்பட்டு விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். இதை பார்க்கையில் நான் இருப்பது இந்தியாவா என கிள்ளி பார்க்க வேண்டியிருந்தது .


     "எங்க வீட்லயும் கொலு வச்சிருக்கோம் வாங்களேன்" என அழைக்க...

பக்கத்தில்தானே வீடு ..

           அவரின் வித்யாசமான பொம்மை கலெக்ஷனை பாராட்டுவதில் ஆரம்பித்த உரையாடல் எங்கெங்கோ சென்று... கடைசியில் ஒத்த எண்ண அலைகளோடு வந்து நின்றது.


              நம் எண்ண அலைகள் எங்கிருந்தும் ஒத்த அலைவரிசை உள்ளவர்களை நம் முன்னே அழைத்து வந்து விடுகிறது.

எதிர்பாராமல் அமையும் நட்புகள் அதிசயம்... ஆனந்தம் !

நட்பின் அறிமுகம் கவிதா வெங்கடேஷ் 


. துபாயில்  கவிதா வெங்கடேஷ் என்னை அவர்கள் வீட்டில் உள்ள அழகிய கொலுவை காண அழைத்து உபசரித்தார்கள்.


 


அந்த கொலுக்காட்சியை தான் பார்க்கிறீர்கள்


நம்ம இந்தியா போலவே கவிதாவெங்கடேஷ் அவர்களும் நவராத்திரியின் போது  கொலு பார்க்க வந்த அனைத்து நண்பர்களையும் உபசரித்து  அனுப்பினாங்க.


இங்கே மதம் இனம் என்பேதே இல்லை


அவங்க இரண்டு மகள்களும் அம்மாவைப்போல அன்பு காட்டி உபசரிப்பு ,கவனிப்பு


நான் தமிழ் நாட்டிலே இருந்து நவராத்திரி கொண்டாடியதைப்போல உணர்ந்தேன்


'யாதும் ஊரே யாவரும் கேளிர்'


எண்ண அலைகள்  படங்கள் :


மஞ்சுளா  யுகேஷ்  - துபாய்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,