கவிதை தென்றல்
பெளர்ணமி
அமுதருந்த அடம்பிடித்த
அந்தக்கால நாட்களிலே ...
ஆகாயத்தில் உனைக்காட்டி
ரசிக்கவைத்து
ருசிக்கவைப்பாள்
ஆசைமிகு
அன்னையவள் ...
அன்றுதொட்டுத்
தொடருதிந்தக்
காதலது இன்றுவரை ..
உந்தன் மீதினில் ..
சலிக்கமல் ரசித்திருப்பேன்
அலுக்காமல் காத்திருப்பேன் ...
-மஞ்சுளாயுகேஷ்.
Comments