பிகில் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல்
பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உதவி இயக்குநர் செல்வாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி .
நடிகர் விஜய் நடித்து, வெளியாக உள்ள படம் பிகில். இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, படத்துக்கு தடை விதிக்கக் கோரி உதவி இயக்குனர் செல்வா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதவி இயக்குநர் செல்வா, பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.அவர் மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, காப்புரிமை என்பதால் செல்வா வாபஸ் பெற்று உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். செல்வா "காப்புரிமை கோரி" வழக்கு தொடரும் பட்சத்தில், வழக்கு விசாரணைக்காக இடைக்கால தடை விதிக்கப்பட்டால், பிகில் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்படும்.என தெரிய வருகிறது
Comments