இவன் ஒரு அதிசயம்

#இவன் ஒரு அதிசயம்'


 தொடர் ..(1)


 



கமல்ஹாசன் இவர் ஒரு அதிசயம் என கூட சொல்லலாம்
இவன் என்றவுடன் நமக்கு மிக நெருக்கமாகிறார்
இந்த தொடர் பதிவுகளில் என்னை நடிகர் கமல்ஹாசன் எப்படி
கவர்ந்துள்ளார் என்பதை குறித்த ஒரு அலசல்


இந்த பதிவுகளில் அவர் நடித்துளள பாத்திரங்களை மட்டுமே என்னுடைய பார்வையில் அலசப்படுகின்றன.
படத்தை பற்றி அல்ல


15.11.2019 இன்று முதல் பகுதி
'சப்பாணியின் சரித்திரம் '


முதலாவதாக அவரின் 16 வயதினிலே படம்
இங்கு நான் பதிவிட்டுள்ள கமலின் படத்தை பாருங்க.
உங்களுக்கு இது நிர்வாணமாக தோன்றுகிறதா.
நிச்சயமாக இருக்காது.
இன்றிருந்து(15.11.2019 ) 42 வருடங்களுக்கு முன்னோக்கி செல்லுங்க.
கமலுக்கு வயது அப்போது 23.
இந்த படம் வெளிவந்த ஆண்டு 1977.
அந்த 23 வயதினலேதான் அவர் சில நல்ல படங்களில் நடித்துகொண்டு இருந்தார் .முண்ணணிக்கு வரும் நேரம்.
நான் இந்த ஸ்டில்லை அப்போது பார்த்தவுடன் அசந்து போனேன்.இப்படி ஒரு பாத்திரமாவென .


இந்த ஸ்டில் ஒட்டு மொத்த தமிழகத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞனை சுட்டிக்காட்டியதாக என் மனதில் பட்டது
,இன்றும் இது போல பலர் உடுத்த உடையின்றி வசித்து வருகின்றனர் ..நமது தேசத்தந்தை காந்தி அவர்கள் இதற்காதான் எல்லோருக்கும் முழு உடை கிடைக்கும் வரை நான் சட்டை அணிவதில்லை என கதர் துண்டினை மேலாடையாக அணிந்தார் .


படிப்பறிவே இல்லாத இளைஞன் இவன்.
அந்த கிராமத்திலுள்ள அத்தனை மக்களுக்கும் வயிற்றுபசிக்காக அடிமை போல வேலை செய்து வரும் காசுகளில் சாப்பிடுபவன்.
தன்னை பற்றி சிந்திகக்க தெரியாத வேகுளி.
இவன் பெயர் சப்பாணி
இவர் அறிமுக காட்சியில் நடந்து வரும்கோணல் நடை.
.பல மாதங்களாக வெட்டப்படாத தலை முடி.
மூக்கிலே வளையம் .
இடுப்பில் ஒரு கோவணம்.
ஆனல் இவன் ஆண்டி அல்ல.
அன்றைய சூழ்நிலையில் ஒரு முண்ணனி நடிகர் தனது 23 வயதில் இப்படிப்பட்ட ஒரு கதா பாத்திரத்தில் நடித்தது மிகப்பெரியஆச்சரியம்
பெரிய அதிசயம்.


இன்றைய கதாநாயகர்கள் இப்படி நடிப்பார்களா .
அன்றே அவர் தனது பாத்திரத்தை உணர்ந்து அந்த பாத்திரத்தில் தன்னை ஐக்கியமாக்கிக்கொண்டுதான் இந்த படத்தில் நடித்தார் என்றால் அது மிகையாகாது.
இவரின் இந்த நடிப்பிற்கான இன்வால்மெண்ட என்ன மிகவும் கவர்ந்தது.


இந்த கதாபாத்திரம் ஒட்டு மொத்த தமிழக கிராமத்து இளைஞனின் அவல நிலையை படம்பிடித்துக்காட்டியது .
இப்படிப்பட்டவர்களுக்கு அரசு என்னசெய்தது .இவர்களுக்கு வேண்டிய
பள்ளி படிப்பினையும் மற்றும் கொத்தடிமைகளாக இருக்கும் அவர்களுக்கு அரசு என்ன செய்தது போன்ற கேள்விகள் நமக்கு எழுந்தது
இந்த பாத்திரம் தமிழக கிராம மக்களின் ஒரு எழுச்சியாக என்னால் அன்று காண முடிந்தது.
அப்படத்தை பார்த்தவர்கள் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா.


இவர்களது தேவை நாம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற சிந்தனையையும் சப்பாணி தூண்டினான் என்றே சொல்லவேண்டும்.
நாம் இருக்கும் நகரம்தான் உலகம் என நினைத்தவர்களுக்கு இதற்கு மேலேயும் இப்படிப்பபட்ட ஒரு கிராம உலகம் இருக்கிறது என்பதை
இந்த சப்பாணி சொன்னான்.


'சந்தைக்கு போனும் ,ஆத்தா வையும் காசு கொடு' என கமல் பேசும் வெகுளிப்பேச்சு
'ஆத்தாவுக்கு எல்லாமே இவன்தான் 'என பரட்டை பேசும் போதும் அதற்கு உள் அர்த்தம் தெரியாமல் வெகுளியாக இருப்பதும்
மயிலு நிர்க்கதியாக விடப்பட்டபின் அவளை காப்பாற்றி பேசும் வசனம் 'ஆத்தா ஆடு வளர்த்துச்சி, கோழி வளர்த்துச்சி, ஆனா, நாயை மட்டும் வளர்க்கலியே'
மயிலு அவனை ஒரு மனிதனாக மாற்றிய பின் தன்னை கேலிபேசியவர்களை அடித்து 'இது எப்படி இருக்கு' என கேட்பதும் ,இறுதியில் தன்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்பிய மயிலுவை களங்கப்படாமல் காப்பாற்றுவதற்ககாக பரட்டையை கொலை செய்து சிறைக்கு செல்லும் வரை
கமல் ஒரு புது அதிசயம் படைத்தார்'


,வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிக் கொண்டிருந்த கமலஹாசன் இத்திரைப்படத்தில் கவர்ச்சியற்ற ஒரு பாத்திரத்தில் நடித்ததன் மூலம், எத்தகைய குணச்சித்திரத்தையும் தாம் ஏற்று நடிக்க வல்லவர் என நிரூபித்தார். கமலஹாசனின் நடிப்பாற்றல் விசுவரூபம் எடுத்தமைக்கு இப்படமே அடிக்கல் நாட்டியது என்றால் மிகையாகாது இந்தப் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கமல்ஹாசன் தானாகவே விரும்பிச் சென்று பெற்று நடித்தார் என்பதுதான் மிகச் சிறப்பானது.. அவர் மட்டும் “என்ன… கோவணத்தைக் கட்டிக்கிட்டு நான் நடி்ககணுமா?” என்று யோசித்திருந்தால், அந்தப் படம், இன்றைக்கு இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்..
,இந்தப் படத்தின் கதையை பாரதிராஜா தன்னிடம் முதல்முதலாகச் சொன்ன நேரத்தையும், அதன் பின் நடந்தவைகளையும் பற்றி கமல்ஹாசன், நடிகை ஆண்ட்ரியாவின் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழாவில் பாரதிராஜாவை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார்.
கமல் பேசும்போது “ இங்ககூட பிரசாத் லேப்பில், இந்தப் பையன மாதிரி சுருட்டை முடியோடு ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் வந்து என்கிட்ட கதை சொன்னார். அப்போ நான் தொடர்ந்து ஷூட்டிங்ல நடிச்சிட்டு ரெஸ்ட் இல்லாம, உடம்பு சரியில்லாம.. வாந்தி எடுத்துட்டுப் படுத்திருந்தேன். அப்போ என் வயிற்றைத் தடவிக்கிட்டே 'மயிலு'ன்னு ஒரு கதையை சொன்னார். இவர்தான்.. 'மயிலு' கதை என் மனதில் அப்படியே பதிஞ்சுடுச்சு. அந்த 'மயிலு'தான் பின்னாடி 'பதினாறு வயதினிலே'ன்னு படமாக வந்தது. அப்போ இவர்கிட்ட நாலஞ்சு கதைகள் இருந்தது. கொஞ்சநாள் கழித்து திரும்பவும் என்கிட்ட கதை சொல்ல வந்தாரு. ரெண்டு, மூணு கதையைச் சொல்லிட்டு சரியில்லாம, இன்னொரு கதையை ஆரம்பிச்சாரு. 'என்ன மயிலு கதையா?'ன்னு கேட்டேன். ஆச்சரியமா பார்த்துட்டு, 'உங்களுக்கு எப்படித் தெரியும்..?'னு கேட்டார். அந்தக் கதையின் பாதிப்பு அப்படி..!அன்னிக்கே முடிவு செஞ்சிருந்தேன். நிச்சயமா இந்தப் படத்துல நாமதான் நடிக்கணும்னு.. அதுதான் நடந்துச்சு..” என்றார்.


நல்ல கதைகளைத் தேடிப் பிடித்து, விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது உண்மையான ஒரு கலைஞனி்ன் விருப்பமாகத்தான் இருக்கும்.. அந்த வரிசையில் கமல், ஒரு உண்மையான கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை..
-உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,