இடைவிடாமல் 100 ராஜா பாடல்களை பாடி அசத்தியஅனூப் சங்கர்
இளையராஜாவை கெளரவித்த இசைக் கலைஞன்!
ஒரு பாடகன் இடைவிடாமல் 10 மணி நேரம் பாட முடியுமா?.
ஒரு இசைக் கலைஞனின் ஹார்மோனியப் பெட்டியில் இருந்து பிறந்தது அதுவும் 100 பாடல்கள் என்றவுடன் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போகின்றனர். 10 மணி நேரம், 100 பாடல்களா? என ஆச்சர்யம் ஓய்வதற்குள், அந்த 100 பாடல்களும்
இது கனவா?நிஜமா நிஜம் தான்,
அந்தப் பாடகன் திருச்சூரைச் சேர்ந்தஅனூப் சங்கர் ஆவார்
. அந்த நிகழ்ச்சியில்,.இளையராஜாவின் இசையில் அமைந்த மெலடி பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 10 மணி நேரம் 100 பாடல்களை இடைவிடாமல் பாடி, இசை ரசிகர்களை அசரடித்திருக்கிறார் அனூப் சங்கர்.
நேற்று(நவம்பர் 10) கோழிக்கோடில் உள்ள தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில், இளையராஜாவின் மெலடி பாடல்களைத் தேர்ந்தெடுத்து பத்து மணி நேரத்துக்கும் மேல் பாடி அரங்கில் உள்ள ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் அனூப் சங்கர்
. சின்ன தம்பி படத்தில் வரும் உச்சந்தலை நெத்தியில பாடலை சிறு வயதில் கேட்ட அனூப், அதன் பின்னர் இளையராஜாவின் தீவிர ரசிகனாக மாறியதாகவும் . இளையராஜாவின் இசையை சுவைத்த பிறகு, தான் பின்ணணி பாடகராக மாறிய பிறகு, தான் அனுபவித்த இசையை மக்களுக்கு வழங்க முடிவெடுத்ததன் விளைவுதான் இந்த இசை விழா.என்கிறார்
தாய் மூகாம்பிகை படத்தில் இடம்பெற்ற ஜனனி ஜனனி என்ற பாடலுடன் தன் இசை மாரத்தானை காலை 11.20 மணியளவில் ஆரம்பித்தர் அனூப் சங்கர். அதனைத் தொடர்ந்து ஜேசுதாசின் குரலில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத(மன்னன்) பாடலை பாட ரசிகர்கள் இந்த அந்த இசை சங்கமத்தில் கரைந்தனர் என்றே சொல்லலாம் 1000. ம் பாடல்களூக்கு மேல் இசையமைத்த இளையராஜாவின் இசையிலிருந்து கவனமாக தேர்ந்தெடுத்த 100 பாடல்களை பாடினார்.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி...(தளபதி), கண்ணே கலைமானே...(மூன்றாம் பிறை), அந்த நிலாவத் தான் நான்...(முதல் மரியாதை), தூளியிலே ஆட வந்த..(சின்ன தம்பி) போன்ற பாடல்களையும் பாடி அவர் அசத்தினார்.
பாடல்களோடு மட்டும் நிற்காமல், ஒவ்வொரு பாடலும் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அந்த பாடலில் கையாளப்பட்டுள்ள இசை நுணுக்கங்களை பற்றிய தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்தார்.
இந்த இசை மாரத்தானில் அனூப் உணவே உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி பாடியுள்ளார் . நிகழ்ச்சி இரவு 10.45 மணி வரை நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 25 இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்களித்திருக்கின்றனர்.
Comments