20 ஓவர் போட்டியில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய பவுலர் தீபக் சாஹர் 'ஹாட்ரிக்' சாதனை உள்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார்.
, இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்றிரவு நடந்தது..
'டாஸ்' ஜெயித்த வங்காளதேச கேப்டன் மக்முதுல்லா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. பின்னர் 175 ரன்கள் இலக்கை நோக்கி வங்காளதேச அணி ஆடியது.. 19.2 ஓவர்களில் அந்த அணி 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் சாஹர் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். தீபக் சாஹர் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசமும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன.
Comments