40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வு மனு

 


விருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு



    நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.69 ஆயிரம் கோடி ஒப்புதல் திட்டத்தில் , விருப்ப ஓய்வு திட்டமும் அடங்கும்.


    பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்
    கடந்த 5-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததில்  50 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சம் ஊழியர்கள் இதற்கு தகுதியானவர்கள் என அறியப்பட்டது.

    நேற்று நிலவரப்படி, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி விட்ட தாக பி.எஸ்.என்.எல். தலைவர் பி.கே.புர்வார் தெரிவித்தார். இவர்களில், 26 ஆயிரம்பேர், குரூப் சி ஊழியர்கள் என்றும்  மொத்தம் 80 ஆயிரம் ஊழியர்கள் வரை விண்ணப்பிக்கலாம்  என்றும், இதன்மூலம் ரூ.7 ஆயிரம் கோடி சம்பள பணம் மிச்சமாகும்  என்றும் அவர் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி