சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா' விருது
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா' விருது
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிகாகோ நகரில் அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 'உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது 2019' வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
அப்போது, அவருக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விழாவில், இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு நிதித்துறை அரசு முதன்மை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments