வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை  அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி


.


    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று மாலை விக்கிரவாண்டி  எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது.


   . கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-


 


           இன்று பல பேர் அரசியலுக்கு புறப்பட்டு விட்டார்கள். சினிமா துறையில் இருந்தும் வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவை பார்த்தும், சிலர் இன்னும் ஆட்சி அமைப்போம் என்று கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள். இது அரசியல். சினிமா அல்ல. அரசியலை தொழில் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ திடீரென பிரவேசித்து பதவிக்கு வந்து விட முடியாது. அப்படி ஆட்சி பொறுப்பை கொடுக்கிற மக்களும் தமிழ்நாட்டு மக்கள் அல்ல. யார் வேண்டுமானால் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க.தான்.


      ஏனென்றால் எம்.ஜி.ஆர். முதலில் எம்.எல்.ஏ.வாக இருந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார். அவர் நேரடியாக முதல்-அமைச்சர் பதவிக்கு வரவில்லை. அதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தார். வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.. தனது திரைப்படம் மூலமும் நாட்டு மக்களின் நிலையை எடுத்துக்கூறினார்.  மக்களுக்கு நன்மை செய்ய, அண்ணாவின் கனவை நினைவாக்க எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி. ஆட்சி அமைத்தார். எம்.ஜி.ஆரை போன்று யாரும் திரையுலகில் இருந்து வரமுடியாது. அவரை போன்று நாட்டு மக்களுக்காக உழைத்தவர்கள் வேறு யாரும் கிடையாது.


       இந்த உத்வேகத்தோடு உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது ஒன்று. அ.தி.மு.க.வில் வெற்றிடம் உள்ளது என்று சொன்னவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இது. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை 2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,