அம்மன் வேஷத்தில் நயன்

அம்மன் வேஷத்தில் நயன் ?


 நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி இயக்க இருக்கும் 'மூக்குத்தி அம்மன் ' படத்தில் நடிக்க இருக்கிறார்.


ஆர்.ஜே.பாலாஜி தற்போது மூக்குத்தி அம்மன் பட முதல் பார்வை போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். நயன்தாராவும் ட்விட் செய்து போஸ்ட்டரை வைரல் ஆக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதைதான் எழுதுகிறார் என்ற தகவல் இதற்கு முன்பே வெளியாகி இருந்தது ஆனால் ஆர்.ஜே.பாலாஜி படத்தை இயக்க போவது தற்போது தான் உறுதியாகி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜி படத்திற்கு கதை எழுதி இருந்தார்


தற்போது மூக்குத்தி அம்மன் படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அவரது நண்பனான என்.ஜே.சரவணன் இணைந்து இயக்க உள்ளனர் .இந்த படத்தின் கதை ,திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஆர்.ஜே.பாலாஜியே எழுதியுள்ளார். இந்த படத்தில் நயன்தாராக்கு ஜோடியாக ஆர்.ஜே.பாலாஜி தான் நடிக்கிறார் என்றும் முதல் பார்வை போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது


நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார் ர் என்றால் கட்டாயம் கதைக்கு நல்ல வலுவான நாயகி தேவை பட்டிருக்கும் மற்றும் கதாநாயகனுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் இருக்கவேண்டும் அதனாலே கட்டாயம் நயன்தாரா இந்த படத்திற்கு ஒப்பந்தமாகி இருப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது .மற்றும் ஒரு பெரிய தொகை இந்த படத்திற்கு அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படவிருக்கிறது என்பதும் உண்மயாக இருக்கலாம்  இந்த படம் 2020 மே மாதம் வெளியாகும் என்ற தகவலும் முதல் பார்வை போஸ்டரிலே சொல்லபட்டிருக்கிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,