சும்மா கிழி பாடல் 'தண்ணி கொடம்' பாடலின் காப்பி

தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் 'தண்ணி கொடம்' பாடல் டியூன் காப்பி



தண்ணி கொடம் எடுத்து பாடல் டியூனை காப்பியடிச்சா கூட பரவால  அதை எஸ்.பி.பி.யை வைத்தே பாட வைத்தது தான் ஹைலட் என்று நெட்டிசன்கள் அனிருத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.


தர்பார் படத்தில் வரும் சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய அந்த பாடலை  கேட்டவர்கள் ஆஹா, நல்லா இருக்கே என்றார்கள். ஆனால் இசை பிரியர்களோ, இதை எங்கேயோ கேட்டது போல  இருக்கே என்று யோசிக்கத் துவங்கினார்கள். அனிருத்து ஐயப்பன் பாட்டு டியூனை இப்படி காப்பியடித்திருக்காரே  சாமி கண்ணைக் குத்தாதா என்று கேட்டு சமூக வலைதளங்களில் சிரிக்கிறார்கள்


. பெரிய ஆளுய்யா நீங்க, இதில் சும்மா கிழிக்க ரெடியா கண்ணுங்களான்னு கொஞ்ச நஞ்ச பில்ட்அப்பா கொடுத்தீர் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.


 


 


 


 


   இன்னும் சிலரோ சும்மா கிழி பாடலை கேட்டவுடன் அட தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது பாடலின் டியூனை தான் அனிருத் சுட்டுட்டார் என்று கூறி அந்த பாடலின் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் தண்ணி கொடம் எடுத்து பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தையே சும்மா கிழி பாடலையும் பாட வைத்த அனிருத் பெரிய ஆளு தான் என்று கூறி கலாய்த்து மீம்ஸ் போட்டு தள்ளுகின்றனர்


சும்மா கிழி பாடலை ரஜினி ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க மற்றவர்களோ, அனிருத்தின் இப்படி காப்பியடித்து அதற்கு பெரிய பில்ட்அப் கொடுப்பது சூப்பர் ஸ்டாரின் இமெஜை பாதிக்கிறது பாலுவின் இமெஜையும் இப்படி பாதிக்கவைக்கிறதே . என்ன தான் காப்பின்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா அனிருத்து என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்


விவேக் ரஜினிக்காக அவரின் வருங்கால அரசியல் வாழ்க்கையை எல்லாம் மனதில் வைத்து யோசித்து யோசித்து மாஸாக பாட்டு எழுதியுள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்க ஒரு கூட்டமோ இப்படியும் வீடியோ போட்டு ஒன்னுமே இல்ல கண்ணா என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறது.


 







 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,