திருவள்ளுவரும் கலைஞரும்

         11.5.2007 அன்று கலைஞர் கருணாநிதிய சட்ட மன்ற பேரவையில் ஆற்றிய உரையிலிருந்து


இங்கே என் எதிரே இருக்கின்ற  வள்ளுவருடைய படத்தை பார்க்கிறேன்


பக்தவத்சலத்தினுடைய நினைவு எனக்கு வருகிறது


நான் சட்ட மன்ற உறுப்பினராக எதிர்க்கட்சி வரிசையிலே எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்தபோது இந்தப்படம் மயிலாப்பூரிலே முதன்முதலாக வரையப்பட்டு அதை வரைந்த நண்பர் இந்த படம் அரசின் சார்பிலே நீங்கள் வெளியடலாம் என்று என்னிடத்திலே சொன்னார் .


அந்த படத்தை அறிஞர் அண்ணா சென்று பார்த்தார்  பெரியவர் பக்தவத்சலனார்  சென்று பார்த்தார் .நாவலர்  நெடுஞ்செழியன் பார்த்தார் .நம்முடைய பேராசிரியர் அன்பழகனார் சென்று பார்த்தார். நான் சென்று பார்த்தேன்.


எல்லாம் பார்த்தார்கள்  .அது அரசின் சார்பிலே வெளியிடப்பட்டால் இதுவரையிலே திருவள்ளுவருக்கு என்ற ஒரு உருவம் அறுதியிட்டு அடையாளமாக காட்டப்படாதிருக்கிற அந்த நிலையை  மாற்றலாம் என்ற எண்ணத்தோடு சட்ட மன்றத்திலே நான் ஒரு நாள் எழுந்து  இப்படி ஒரு படம் மையிலாப்பூரிலே  ஒரு அருமையான ஒவியரால் தீட்டப்பட்டிருக்கிறது, அந்த படத்தை  இங்கே சட்ட மன்றத்திலே வைப்பீர்களா என்று கேட்டேன் .


ஆனால் பெரியவர்  பக்தவத்சலம் அப்போது வைக்கப்படும் என்றோ முடியாது என்றோ சொல்லாமல் மிக தந்திரமாகச் சொன்னார் சட்டமன்ற உறுப்பினர்  .இந்த கேள்வியை   சட்ட மன்ற உறுப்பினர்  அவருடைய செலவிலே அந்தப் படத்தை இங்கே  வைப்பதாக இருந்தால் வைக்கப்படும் என்று சொன்னார்


தயங்காமல்  நான் மறுநாளே அதற்கு எவ்வளவு செலவாகும் நேற்று சொன்ன முதலமைச்சர் சொன்ன உறுதியை நான் காப்பாற்றுகிறேன்  என்று கடிதம் எழுதினேன்


இவன் வம்புக்காரனாக இருப்பான்  போலிருக்கிறது என்று கருதி மறு நாள் பகத்வத்சலமே கருணாநிதி வாங்கி அநத் படத்தை வைத்தான் என்று வந்து வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால்  காங்கிரஸ் ஆட்சியிலே  ஆட்சிக்கு அந்த அவப்பெயர் வந்து விடக்கூடாது  என்ற காரணத்திதனாலே அவரே இங்கே வே கோபால் சர்மா தீட்டிய அந்த வள்ளுவர் படம் கருணாநிதி அன்றைக்குக் கேட்டுக்கொண்டாரே அந்த  அடிப்படையில் வைக்கப்படும் என்று சொன்னார்


அவர் சொன்னபடி அந்தப்படம் இங்கே வைக்கப்பட்டது


 ஆகவே இங்கே வள்ளுவர் இருப்பதறகு காரணம் என்னடைய கேள்வியும் பெரியவர் பக்தவத்சலனார் அவர்களுடைய நல்ல தன்மையும் தான் .


அதற்கு பிறகு இன்றைக்கு வள்ளுவர் எந்த இளவிற்கு தமிழகத்திலே பிராச்சாரம் செய்யப்பட்டிருக்கிறார் எந்த அளவிற்கு  அவருடைய உருவங்கள் பரவியிருக்கின்றன அவருடைய கருத்துகள் எந்த அளவிற்கு இப்போதும் பரப்பப்படுகின்றன என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்


ஆகவே  இந்த  சட்டமன்றத்திலே வள்ளுவருடைய திருவுருத்தைப்பார்த்வுடன்  எனக்கு வந்த நினைவை நான் இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை


ஆகவே சொன்னேன் என்றார்


Article by


தனலட்சுமி  பாண்டியன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,