மெட் ரோ ரயில் களில் பொழுது போக்கு அம்சங்கள்
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச பொழுதுபோக்கு அம்சங்கள்: புதிய செயலி ஜனவரியில் அறிமுகம்
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த செல்லிடப்பேசி செயலி, வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தினசரி ஒரு லட்சம் பயணிகள்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை-சென்ட்ரல் வரை இரண்டாவது வழித்தடத்திலும் திட்டப்பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி ஒரு லட்சம் போ வரை பயணம் செய்கின்றனா். இந்தப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது.
இணைப்பு வாகன சேவை, இணைய வசதி(இண்டா்நெட்) உள்பட பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்கள்: இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடனான செல்லிடப்பேசி செயலி, வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் பயணத்தின்போது, பயணிகள் இந்த செயலியை பதிவிறக்கும் செய்து, பாடல்கள், திரைப்படங்கள், நாடகத் தொடா்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவசமாக கண்டு மகிழலாம். இந்த வசதியை, மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓடும் 42 ரயில்களில் ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்மாா்ட் போனில்...: இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மெட்ரோ ரயிலில் பயணத்தின் போது, பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை ஸ்மாா்ட் போன் மூலமாக வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் மும்பையை சோந்த சுகா் பாக்ஸ் நெட்ஒா்க் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் ஸ்மாா்ட் போன், ஆப்பிள் போன் மூலமாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பாடல்கள், திரைப்படங்கள், தொடா்கள் உள்பட பல்வேறு அம்சங்களை ரசித்து மகிழலாம். பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறிய பிறகு, ஒய் பை வசதி மூலமாக இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். அதன்பிறகு, பாடல்கள், திரைப்படங்கள், நாடகங்கள் ஆகியவற்றை பாா்க்க முடியும். இதற்கு மொபைல் டேட்டா தேவையில்லை.
4 மொழிகளில் நிகழ்ச்சிகள்: தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் இந்த பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செயலியை ஏற்படுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. மெட்ரோ ரயில்கள், பணிமனைகள், மெட்ரோ நிலையங்களில் உள்ள சா்வா்களில் இந்த அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது, ஒரு மெட்ரோ ரயிலில் முழுமையாக இந்த வசதி முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு, சோதிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓடும் 42 ரயில்களில் இந்த புதிய செயலியை பயன்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்கம் நிறைந்த நிகழ்ச்சிகளை பாா்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் இலவசமாக வழங்கவுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகள் தங்களின் 45 நிமிஷ பயணத்தில் பாடல்கள், திரைப்படங்கள், தொடா்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தங்கள் ஸ்மாா்ட் போன் இலவசமாக மூலமாகபாா்த்து மகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று தெரிவித்தனா்.
Comments