நயன்தாராவின் கோபம்

 நயன்தாரா கோபமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி பேட்டி அளித்துள்ளதன் பின்புலத்தில் தர்பார் பட சம்பவம் தான் காரணம் என பேசப்பட்டு வருகிறது.


       லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வெற்றிப்பட நடிகையாக வலம் வரும் நயன்தாராவின். சமீபகாலமாக தொடர்ந்து அவர் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அவரது படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும்  அவரது மார்க்கெட் முண்ணயில்தான் உள்ளது


   . பொதுவாகவே ஊடகங்களை விட்டு விலகி இருக்கும் நயன், சமீபத்தில் வோக் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் .அந்த பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் பல விசயங்கள் பற்றி அவர் சொல்லியிருந்தார்.  தற்போது ரேடியோ ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் ஏ.ஆர்.முருகதாஸைப் பற்றி பேசியது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என சொல்லலாம்


    தற்போது தான் அவர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.   இன்னும் அந்தப் பட வேலைகளே முடியாத வேளையில் நேரடியாக அவர் முருகதாஸையும்,அவர் இயக்கிய  கஜினி படத்தையும் விமர்சித்திருந்தார்  நயனின் இந்த கோபத்திற்கு காரணமே தர்பார் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் தான் எனக் கூறப்படுகிறது.  தர்பார் படத்தில் நடித்த போது, நயனுக்கு சம்பளப் பாக்கி இருந்துள்ளதாகவும் இதனால்தான்  கடைசி தின படப்பிடிப்புக்கு வராமல் இருந்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. ரஜினியையே நயன் காத்திருக்க வைத்து விட்டார் என்றும், கடைசியில் முருகதாஸ் சமாதானப் படுத்தி நயனை அன்று நடிக்க வைத்தார் என்றும் கூறப்பட்டது.  இந்த விவகாரம் ஊடகங்களில் கசிய முருகதாஸும், தயாரிப்பு தரப்பும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, முருகதாஸ் மீது நயன் கோபத்தில் இருந்துள்ளார்.


          சம்பளம் தந்தால் தான் நடிப்பேன் என நயன் அடம் பிடிப்பதாக வெளியான செய்தி, அவரது இமேஜையே கெடுத்து விட்டதாக அவர் கருதி இருக்கலாம் அதன்  எதிரொலியாகத் தான் நேரடியாகவே முருகதாஸை தாக்கி அவர் பேட்டி அளித்துள்ளார். இல்லையென்றால் 11 வருடங்கள் கழித்து இந்த விவகாரத்தை அவர் கையில் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.. அதே போல  ஏமாற்றம் அதோடு கஜினி படம் போலவே தர்பாரிலும் நயன் கேரக்டர் அவ்வளவாக சொல்லிக் கொள்வது போல் இல்லை என்கிறார்கள். கஜினியில் தான் ஏமாற்றினார் என்றால், தற்போது தர்பாரிலும் அதே போலதானா என்ற கோபமும் நயனுக்கு இருந்ததால்தான் அவர் இப்படி ஒரு  பேட்டி அளிக்க காரணமாக இருக்கலாம் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒரு பேச்சு உலாவில் இருக்கிறது.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி