ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது
கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
50-வது சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 20 ஆம் தேதி துவங்கி, 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இடம்பெற உள்ளன.
. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
விருது வழங்குவதாக அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/rajinikanth/status/1190515426981072897
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர்ஜெயக்குமார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
.
Comments