பாண்டி பஜாரில் நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகள்
ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகள்--
முதலமைச்சர் பழனிசாமி திறப்பு
மத்திய அரசின் திட்டப்படி இந்தியாவில் நூறு நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உட்பட 12 நகரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் ரூ.39.36 கோடி செலவில் நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையின் இருபுறங்களிலும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மற்றும் மேலும் சாலையில் உள்ள அனைத்து சுவர்களிலும் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சாலையில் உள்ள மரங்களை சுற்றி பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் பழனிசாமிஅவர்கள் இந்த நடைபாதை வளாகம் மற்றும் சாலைகளை இன்று திறந்து வைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகளில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
Comments