காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள் ---அவள் அப்படிதான்

காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள்



அவள் அப்படிதான்


திரைப்படம்


 


 



  • ருத்ரய்யா... கிட்டத்தட்ட 36 ஆண்டு காலம் தமிழ் சினிமா தவறாமல் உச்சரிக்கும் படைப்பாளியின் பெயர் இது. இத்தனைக்கும் ருத்ரய்யா இயக்கியவை இரண்டே இரண்டு படங்கள்தான்.

  • இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாகப் போகவில்லை. ஆனால் ருத்ரய்யாவுக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு பக்கத்தை உருவாக்கும் அளவுக்கு அழுத்தமான பதிவுகளாக அமைந்தன.

  •  

  • ஒன்று அவள் அப்படித்தான். இன்னொன்று கிராமத்து அத்தியாயம்.


   சி.ருத்ரைய்யா தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர்.இவரின் சொந்த ஊர் சேலம் அருகிலுள்ள ஆத்தூர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர்.சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்


     இவரது முதல் படமான "அவள் அப்படித்தான்", முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன்ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும்  அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது,


    வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்றது. இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.


    புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா இயக்கிய "கிராமத்து அத்தியாயம்" என்னும் திரைப்படமும் தோல்வியுற்றது. இதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் துவக்கத்திலேயே தோல்வியுற்று விட்டன.


2014 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாளன்று தனது 67வது அகவையில் சென்னையில் காலமானார்


.


. 1978-ஆம் ஆண்டு வெளிவந்த "அவள் அப்படித்தான்'


. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.


   ,இவரது அடுத்த படம் 1980ம் ஆண்டு சந்திரஹாசன் நடிப்பில் வெளிவந்த "கிராமத்து அத்தியாயம்' என்ற படமும்  தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.


 


       ஒரு சிலருக்கு சிறுவயதில் பார்க்க நினைத்த படங்களை இப்போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் . தனக்குப் பிடித்த நடிகர்,நடிகை மற்றும்  இயக்குனர்களின் வேறு படங்களைப் பார்க்கத் தோன்றும் . வாசிப்பின் மூலமும் நிறைய திரைப்படங்களைப் பார்க்கத் தோன்றும் . நண்பர்கள் மூலமாகவும் தற்போது Facebook மூலமாகவும் உலகெங்கும் வெவ்வேறு மொழிகளில் உருவான மாறுபட்ட திரைப்படங்கள் பற்றித் தெரிந்து கொள்கிறோம் .புதுத்திரைப்படங்கள் ,படம் பார்த்தவர்களின் கருத்துக்களை வைத்தே மற்றவர்களால் பார்க்கப்படுகின்றன . திரைப்படம் பார்க்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும்  " இந்தப் திரைப்படங்களைப்  பார்க்க வேண்டும் !" என்று பட்டியல் வைத்து இருப்பார்கள் . ஒவ்வொருவரின் பட்டியலும் கண்டிப்பாக வேறுபடும் .

     அப்படி பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல், அனுபவம் கூட கூட  மாறிக்கொண்டே இருக்கும் .  பார்க்க வேண்டும் என்ற பட்டியல்லில்  " அவள் அப்படித்தான்  கட்டாயம் இடம் பெற்று இருக்கும்


   ஆறுமுகம் என்னும் தனது பெயரை ருத்ரய்யா என்று மாற்றி வைத்துக்கொண்டார்  இப்படத்தின் இயக்குனர்


 . ஸ்ரீபிரியா,கமல்,ரஜினி மற்றும் பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

   தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். நமது எதிர்பார்ப்புகளை பல மடங்கு பூர்த்தி செய்துள்ளது  .மஞ்சு,அருண் மற்றும் தியாகு இந்த மூன்று கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல் தான் இந்தத் திரைப்படமே . உரையாடல்களின் மையப்புள்ளி அருண் கதாப்பாத்திரம் . அருண் மற்றும் தியாகு ஆகிய இருவருக்கும் இடையேயான உரையாடல் .அருண் மற்றும் மஞ்சு இடையேயான உரையாடல் இத்திரைப்படத்தில் அடுத்தடுத்து இடம்பெறுகிறது . ஆனால் , இந்தக் கதையின் மையப்புள்ளி மஞ்சு கதாப்பாத்திரமே .

    உரையாடல் ,  அதாவது வசனம் இந்தத் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலப்படங்கள் போல இந்தப்படத்திற்கு ருத்ரய்யா ,வண்ணநிலவன் மற்றும் சோமசுந்தரேஸ்வர் ஆகிய மூவரும்  இணைந்து திரைக்கதையும் ,வசனமும்  எழுதியுள்ளனர்


     தமிழ்ச் சூழலில் இது மிகவும் அரிது . ஆங்கில வசனங்கள் அதிகம் இடம்பெற்று இருந்தாலும் கதைச் சூழலுக்கு அழகாக பொருந்துகிறது


. ஒரு சமூக சேவகி கேமரா முன்பு  தோன்ற மேக் அப் போடனுமா னு கேட்குறாங்க .அதற்கு மஞ்சு கதாப்பாத்திரம் சொல்லும் பதில் " நீங்க எப்பவும் போடுவீங்களே இந்த சொசைட்டி மேக் அப் அதைப் போட்டா போதும் " ," வித்தியாசமா இருக்குற மாதிரி காட்டிகிறது ஒரு passon " என்று மஞ்சு தியாகுவே பார்த்து கேட்பார் .அதற்கு அருண் (கமல்)" அப்படி இருக்குறதுதான் சரி னு நான் நம்பறேன் "என்று சொல்வார் .
மனித மனங்களின் கருப்புப்பக்கங்களைப் படம்பிடித்துக் காட்டப்படுவதன் காரணமாகவோ என்னவோ இந்தப்படத்தின் பெரும் பகுதி இருட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது . குளோசப் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன . நல்லுசாமி மற்றும் ஞானசேகரன்  ஆகியோர்  ஒளிப்பதிவு செய்துள்ளனர் .


வழக்கமான இரண்டரை மணி நேர படங்களோடு ஒப்பிடுகையில் இதன் கால அளவு சிறிது குறைவானது


இளையராஜாவின் இசைக்கு இதில் பெரும்பங்கு உண்டு. வித்தியாசமான படமென்றாலே ராஜாவிற்கு பயங்கர மூடு வந்துவிடுமோ என்னமோ. மனிதர் பின்னியிருந்தார்.

உறவுகள் தொடர்கதை ....
பன்னீர் புஷ்பங்களே.... (கமலின் குரலில்)
அங்குமிங்கும் பாதை உண்டு, இதில் நீ எந்தப்பக்கம்...

போன்ற பாடல்கள் ராஜாவின் சிறந்த இசை வெளிப்பாடுகளில் சில..
அவள் அப்படித்தான் ஒரு அபூர்வமான படம்  தன்னுடன் பழகும் ஆண்களின் தொடர்ச்சியான துரோகத்தினால் பாதிக்கப்பட்டு எல்லா ஆண்களின் மீதும் வெறுப்பை உமிழும் ஒரு பெண், தன்னை அணுகும் ஒரு யோக்கியமான ஆணையும் அவ்வாறே தன் ஒவ்வாத பார்வையினால் ஒதுக்கி பின்னர் தன் தவறை உணருகின்ற கதை. இதை இயக்குநர் சொல்லியிருக்கும் விதம்தான்  நம்மை அசர வைக்கிறது.

    . கமலுக்காகவும் , . இப்படி ஒரு படம் எடுக்க மிகப்பெரும் துணிச்சல் வேண்டும் . படிப்பறிவு சதவீதம் மிகவும் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் இப்படி ஒரு படம் எடுக்க யாருக்கும் அன்று துணிச்சல் இல்லை . 1978 -ல் இப்படி ஒரு படம் தயாரிக்க யாரும் முன்வராத காரணத்தாலோ என்னவோ ருத்ரய்யாவே இந்தப்படத்தை தயாரித்துள்ளார் . 

   டைட்டில் முதல் முடிவு வரை இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது .. மஞ்சு  கதாப்பாத்திரம் ,மிகவும் சிறப்பாக  படைக்ப்பட்டுள்ளது . பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகவும் குறைந்த படங்களே தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ளன .பெண்களைப் பற்றிப் பேசும் இந்த படம் தமிழ்ப் படங்களில்  பெண்கள் பற்றிய படங்களை முதல் 5 படங்களுக்குள் இந்தப்படம் கண்டிப்பாக இடம்பெறும் முதல் னு கூட சொல்லலாம்


 .    
        இந்தக் கதாபாத்திரத்திற்கு அப்போதிருந்த கதாநாயகிகளில் ஸ்ரீப்ரியாவைத் தவிர வேறு யாரையும் பொருத்திப் பார்க்கமுடியவில்லை மனோரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மூர்க்கத்தனமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளை யதார்த்தமாக செய்திருந்தார் .

கமல்தான் இந்தப் பாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாதான் சரியாக இருக்கும் என்று இயக்குநருக்கு சிபாரிசு செய்ததாவும் அவரது பேட்டிகளின் மூலம் அறியப்படுகிறது


. ஸ்ரீப்ரியாவும் இதற்காக கமலுக்கு தன் இன்னொரு பேட்டியில் நன்றி தெரிவித்திதாக செய்திகள் உள்ளது.

 

        கமலுக்கு ஒரு மிக கண்ணியமான ஜென்டில்மேன் கதாபாத்திரம். மஞ்சுவின்  கடநத் கால நிகழ்வுகளை அவளின் மூலமே அறிந்தபின்னால் அவள் மீது அனுதாபம் கலந்த தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஒரு சிக்கலான அதை அவன் மூர்க்கமாக நிராகரிக்க, மனம் உடைந்துபோய் தன் பெற்றோர் நிச்சயித்த பெண்ணை ( சித்ரா) திருமணம் செய்து கொள்கிறார்.

ப்ரியாவிற்கு மேலதிகாரியாகவும், கமலுக்கு நண்பராக வரும் ரஜினிகாந்தின் பாத்திரம் பெண்களின் மீது ஒரு ஆணாக்கியவாதியின் பார்வையை வைத்திருப்பதை கொண்டது  . நெற்றியில் விபூதி பட்டையும், கையில் மது கிளாஸீமாக "நான் என்ன சொல்றேன் மச்சான்" என்று வரும் காட்சிகள் களை கட்டும். பெண்களின் மீது ஒரு ஆணாக்கியவாதியின் பார்வையை வைத்திருக்கும் இவர் பெண்களை வெறும் போகப் பொருகளாக மட்டுமே பார்ப்பார்.

இவ்வளவு திறமையுள்ள இவர் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வணிக
சூழலில் சிக்கிக் கொண்டதுநமது துரதிர்ஷடமே.

இந்தப்படத்  பெரும்பான்மையான இடங்களில் வசனங்கள் புது சவரக்கத்தி போல் மிக கூர்மையாக இருக்கிறது.
கமல் தன் மீது அபிமானம் காட்டுவதை வெறுக்கும் ஸ்ரீப்ரியா, அவரை வெறுப்பேற்றும் விதமாக ரஜினியுடன் ஒரு பார்ட்டிக்கு செல்வார். அங்கே இருவரும் தனியாக இருக்கும் சூழ்நிலையில், ரஜினி தவறாக அவரை அணுக முயல, ரஜினியின் கன்னத்தில் அறைந்துவிடுவார்.

மறுநாள் ஸ்ரீப்ரியாவை சந்திக்கும் ரஜினி முந்தின நாள் நடந்த நிகழ்வைப்பற்றிய எந்தவித சலனமும் இல்லாமல் உரையாடத்துவங்க, திகைத்துப் போய் நிற்கும் ஸ்ரீப்ரியாவிடம் இவ்வாறு கூறுவார்.

"ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்."


செம வசனம் இல்ல




இந்தப்படத்தின் இயக்குநர் ருத்ரைய்யால் ஆனந்தவிகடன் இதழுக்கு பேட்டி அளித்தபோது .

'சரியான கதை கிடைக்கவில்லை' என்று இப்போதைய தமிழ் இயக்குநர்கள் கூறுகிறார்களே? என்கிற கேள்விக்கு .

'சிவகாசியில் இருந்து கொண்டு, தீப்பெட்டியை தேடுபவர்கள் இவர்கள்'


என பதில் அளித்திருந்தார்



 


 


 


 


. அருணின் கமல்  மென்மையான ஆண்மை குணம் மஞ்சுவிற்குப் பிடித்திருக்கிறது. இருந்தாலும் அவனிடம் கடுமையாகப் பேசுகிறாள். பாறை போன்ற மனதில் வேர்விடத் துடிக்கும் அருணை ஜாக்கிரதையாகத் தவிர்க்கப் பார்க்கிறாள்.

அருணின் வீட்டிற்குச் செல்லும் மஞ்சு ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து "நீங்க கம்யுனிஸ்டா?" என்று கேட்கிறாள்.

"இல்லையே...! எல்லாத்தையும் தெரிஞ்சிக்கத் தான் படிக்கிறேன். அப்படியே இருந்தாத் தான் என்ன?" என்று அருண் சொல்கிறான்.

கேள்விக்கான பதிலைச் சீண்டாமல் "எனக்கு செகப்பக் கண்டாலே எரிச்சல்" என்று எங்கோ நகர்ந்து செல்கிறாள். புரட்சிக்கான அதே நிறம் தானே விளக்குடன் தொடர்புபடுத்தி விபச்சாரத்தின் இடத்தை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. அந்த முரண்பாடுகளே மஞ்சுவின் வாழ்விலும் பேச்சிலும் வெளிப்படுகிறது.


. வியாபார சினிமா முற்றிலும் ஜீரணித்த ரஜினியின் ஆரம்பகால அசத்தலான நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்படுகிறது. ரஜினியிடம் இருக்கும் நடிப்புத் திறமை உண்மையிலேயே உயர்ந்தது. அவரும் சவாலான பாத்திரங்களையே விரும்புவார் என்று நினைக்கிறேன். இன்றைய திரைப்படங்களில் அவர் செய்யக் கூடிய கதாப்பாத்திரங்கள் எதிர்காலத்தில் அவரை நகையாடப்போகிறது. அந்த நகைப்பில் இது போன்ற பங்களிப்புகள் மறைந்து  போய்விடுகிறது



அந்தக்காலத்தில் இசையமைப்பாளர்தான்,
தயாரிப்பு அலுவலகத்துக்கு வரவேண்டும்.
இசையமைப்பாளர் இளையாராஜா அலுவலகத்துக்கு வருகிறார் என்பதற்காக அவசரம் அவசரமாக பேன் வாங்கி மாட்டி இருக்கிறார்கள்.
அது வரை படத்தயாரிப்பு அலுவலகத்தில் பேன் கூட கிடையாது.
ஆனால் அவர் வரும் நேரம் கரண்ட் இல்லை.
அந்த புழுக்கத்திலேதான்,
இன்றும் குளிர்ச்சியையும் இனிமையையும் தரும் டியூனை உருவாக்கி இருக்கிறார்.
இசைக்கருவிகளில்... பியானோதான் இளையாராஜாவுக்கு 'பெட்'.
அவர் பியானோ இசையில் போட்ட 'மாஸ்டர் பீஸ்களில் ஒன்று' ...
'உறவுகள் தொடர் கதை' என்ற பாடலும் ஆகும்.
[ மற்றொன்று 'ஹேராம்' படப்பாடலான 'நீ பார்த்த பார்வை']
இப்பாடலில், இளையராஜாவின் இசையில் 'மோனாலிஸா' தன்மையை உணரலாம்.
கதையின் மையக்கருத்து,


படம் வெளியான நேரம்,
திரைப்பட மேதை மிருணாள் சென் சென்னைக்கு வந்திருக்கிறார்.
தற்செயலாக தியேட்டரில்  'அவள் அப்படித்தான்' படம் பார்த்திருக்கிறார்.
ஒரு கலைத்திரைப்படம் இப்படி புறக்கணிக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு
மனம் வெதும்பி பத்திரிக்கையாளர்களை வரவழைத்து,
தனது மனக்குமுறலை வெடித்திருக்கிறார்.
'நல்லதோர் வீணையை புழுதியில் கிடத்தியதை' சாடி அவர் கொடுத்த பேட்டி பத்திரிக்கைகளில் வெளியானது.
பத்திரிக்கைகள் தொடர்ந்து கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியா,ருத்ரையாவிடம் பேட்டி வாங்கி வெளியிட்டு கலை ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்த்தன.
படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நூறு நாட்கள் ஓடியது.

ஒளிப்பதிவு மேதை  'மார்க்கஸ் பார்ட்லே' ,
அந்த வருடத்திற்கான சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை
'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தை தேர்வு செய்து அறிவித்து விட்டார்.
காரணம் வண்ணப்படங்களுக்கு  மட்டும்தான்,
அப்போது விருது வழங்கி வந்தார்கள்.
எனவே  'அவள் அப்படித்தான்' ,
மார்க்கஸ் பார்ட்லே பார்வைக்கே வரவில்லை.
ஆனால் 'சிறந்த படத்திற்கான' தேர்வுப்பட்டியலில் இருந்த படங்களை திரையிட்ட போது,
'அவள் அப்படித்தானை' பார்த்து இருக்கிறார் மார்க்கஸ் பார்ட்லே.
படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருப்பதை கண்டு,
இப்படத்திற்கும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வழங்கப்பட வேண்டும்
என அடம் பிடித்திருக்கிறார்.
எனவே முதன் முறையாக 'கருப்பு - வெள்ளை' படத்திற்காக
தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டது.
அதன்படி,  'அவள் அப்படித்தான்' ஒளிப்பதிவாளர் நல்லுசாமிக்கு
விருது வழங்கப்பட்டது.
சிறந்த படமாக 'அவள் அப்படித்தான்' படத்தை,
தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.


 



  • தமிழ் சினிமா முழுமையாக வண்ணத்துக்கு மாறிக் கொண்டிருந்த தருணத்தில், தன் முதல் படத்தை கறுப்பு வெள்ளையில் தந்தார் ருத்ரய்யா. அன்று முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்த ரஜினி, கமல் (அன்றைய தேதிக்கு கமல் - ரஜினி என்ற வரிசைதான்!) ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன் என பாத்திரங்களுக்கேற்ப தேர்வு செய்திருந்தார்.

  •  

  • இறுதிக் காட்சி, ரஜினி காரை ஓட்டிக் கொண்டிருப்பார். பின்னிருக்கையில் புதுமணத் தம்பதிகள் கமல் - சரிதா. உடன் ஸ்ரீப்ரியா. சரிதாவைப் பார்த்து 'பெண்ணுரிமை பத்தி என்ன நினைக்கிறீங்க?' என்று கேட்பார் ஸ்ரீப்ரியா.

  • பதிலுக்கு 'ஓ.. எனக்கு அதப் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது' என்பார் சரிதா.

  • 'ஆச்சர்யமே இல்ல.. நீங்க சந்தோஷமா இருப்பீங்க!' என்று கூறிவிட்டு இறங்கிக் கொள்வார் ஸ்ரீப்ரியா.

  • 'மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறப்பாள். அவள் அப்படித்தான்..' என்ற வாய்ஸ் ஓவருடன் படம் முடியும்!

  •  

  • அன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே அந்நியமான, புதிய முயற்சி இந்தப் படம். தோல்வியைச் சந்தித்தது. ஆனால் பின்னாட்களில் மறுவெளியீடாக வந்து வெற்றிப் பெற்றது.

  • இந்தப் படத்தை 100 மறக்க முடியாத இந்திய சினிமாக்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து கவுரவித்தது ஐபிஎன் தொலைக்காட்சி.


 


---தமிழ் உமா…


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,