திருப்பத்தூர் மாவட்டம் உதயம்

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயமானது. இந்த மாவட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.


,

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்படி  வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.




புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களின் தொடக்க விழா 28.11.2019 நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா திருப்பத்தூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது.

விழாவுக்கு  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசினார். கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



திருப்பத்தூர் மாவட்ட தொடக்கவிழாவில் ரூ.94 கோடியே 37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு ம. ப. சிவன் அருள் , இ .ஆ .ப அவர்கள்நலத்திட்ட உதவிகளுக்கான காசோலையை முதலமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார்



அதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய தாவது:-

புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1790-ம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 3-4-1792 வரை செயல்பாட்டில் இருந்தது. பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் தலைநகராக திருப்பத்தூர் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் இன்று ரெயில்நிலையமாக இருக்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் நடைபெறும் அரசால் திருப்பத்தூர் புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,