விஜய் சேதுபதி படத்தில் அஜித்.. தல

விஜய் சேதுபதி படத்தில் அஜித்.. தல 


      விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் சங்கத்தமிழன். 15/11/2019 அன்று  ரிலீசாக வேண்டிய இப்படம், சிலப்பல காரணங்களால் ஒரு நாள் தாமதமாக 16.11.2019 அன்று ரிலீசாகியுள்ளது.


முன்னதாக சங்கத்தமிழன் பட ரிலீஸ் தாமதத்திற்கு அஜித் நடித்த வீரம் படத்தின் நஷ்டமே காரணம் என ஒரு செய்தி வெளியானது. இத்தகவல் இணையத்திலும் வைரலானது. அது உண்மையில்லை என்பதை மறைமுகமாகக் கூறும் வகையில் சங்கத்தமிழன் டைட்டில் கார்டு அமைந்துள்ளது. அதாவது விஜயா புரொடக்சன் எனக் காட்டப்படும் போது, டைட்டில் கார்டில் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் மற்றும் விஜய் படங்களில் பாடல்கள் போடப்பட்டு உள்ளது.


 


குறிப்பாக அஜித்தின் வீரம் படப் பாடல் அதில் உள்ளது. எனவே, தல ரசிகர்கள் சங்கத்தமிழன் படத்தில் அஜித்தும் இருப்பதாகக் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடவே, இதனைக் கொண்டாடும் வகையில் #Veeram என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,