சென்னை மெட்ரோ ரயில்களின் நேர அட்டவணைகள்

சென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை  அறிய புதிய வசதி


 


 


 


         சென்னை மெட்ரோ ரயில்களின் நேர அட்டவணைகள் விவரம் அருகே உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் மின்னணு பெயர் பலகையாக இனி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.


 



சென்னையில் வண்ணாரப்பேட்டை மற்றும் விமான நிலையம், சென்ட்ரல்-கோயம்பேடு- விமான நிலையம், சென்டரல் - அண்ணாசாலை- பரங்கிமலை என இந்த பகுதிகளுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.


சென்னையில் மெட்ரோ ரயில்கள் பல்வேறு வழித்தடத்தில் 10 நிமிடம் அல்லது 5 நிமிடம், சில நேரங்களில் 15 நிமிட கால இடைவெளியில் இயக்கப்படுகிறது.


 மெட்ரோ ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில்நிலையங்களின் அருகில் உள்ள பேருந்து நிலையங்கள் அனைத்திலும் டிஜிட்டல் வடிவில் மெட்ரோ ரயில் நேரங்கள் தெரிய போகிறது. இதற்காக ரயில் புறப்படும் மற்றும் வருகை நேரங்கள் குறித்த அட்டவனை மக்கள் பார்வைக்கு மின்னணு தகவல் பலகையாக வைக்கப்பட முடிவுசெய்யப்பட்டுள்ளது.     முதல்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் வருகை புறப்பாடு குறித்து மின்னணு தகவல் பலகை நேற்று திறந்து வைக்கப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் மெட்ரோ ரயில நிலையத்தின் அருகே உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இந்த மின்னணு பலகை வைக்கப்பட உள்ளது.


விமான நிலையத்தில் வைத்துள்ள மின்னணு தகவல் பலகை குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம், வெளியிட்டுள்ள அறிக்கையில், " மெட்ரோ ரயில் புறப்படும் வரும் நேரங்களை நிகழ்நேர அடிப்படையில் காண்பிக்கப்படும் விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் மெட்ரோ ரயிலில் தங்கள் பயணத்தைத் திட்டமிட இது உதவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,