வெனிஸ் நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பு.

 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை  வெனிஸ் நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பு.



     இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில்  அமைந்துள்ள வெனிஸ் நகர கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் 12-ம் தேதி சுமார் 1.87 மீட்டர் (6 அடி) உயரத்துக்கு அலைகள் வீசியுள்ளன. தொடர்ந்து நகரை நோக்கி வீசிய இத்தகைய ஆளுயர அலைகளால் நகரில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 


 


அலைவீச்சில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்த நகரின் அவசரகால சேவைக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் அளிக்கும் தகவலின்படி 78 வயதான முதியவர் ஒருவர் அலைவீச்சில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் எனத் தெரிகிறது.மீட்புக்காக கூடுதலாக நீர்வழி ஆம்புலென்ஸ் படகுகள் அப்பகுதியில் பணியாற்றுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்ததால் அந்த நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,