மெட்ரோவின் கட்டண சலுகை

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..


கட்டண சலுகை



 


       சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனைத்து வகையான வழித்தடத்திலும் விடுமுறை நாட்களில் பயணிப்பதற்கு 50 சதவீத கட்டண சலுகை அறிவித்துள்ளது


.   சென்னையில் மெட்ரோ ரயிலில் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்களின் ஆதரவு குறைவே .அவர்கள் இன்றுவரை வருத்ததுடன் தான் பயணிக்கிறார்கள்.  சென்னை போக்குவரத்து நெரிசல் என்பது மெட்ரோ ரயில் இயங்கி வரும் வழித்தடங்களில் மிகவும் கடினமாக இருந்தாலும் கட்டணம் அதிகம் என்பதால் மக்கள் பயணம் செய்வதில்லை
    கோயம்பேடு வடபழனி ஆலந்தூர் வழித்தடமாக இருந்தாலும் சரி, திருமங்கலம் மற்றும் சென்ட்ரல் இடையிலான வழித்தடமாக இருந்தாலும் நிச்சயம் நாம் நினைத்த நேரத்திற்கு நாம் அலுவலகத்திற்கு சென்றுவிட முடியாது.  அண்ணா சாலை நந்தனம், சைதாப்பேட்டை வழித்தடத்திலும் போக்குவரத்து கடும் நெரிசல் தான் நிலைமை.ஆகவேதான் சென்னை மெட்ரோ ரயிலில் தான் அலுவலகம் செல்வோர், மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பயணிக்க விரும்புகிறார்கள். ஆனால் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் செல்வதை விரும்புவதில்லை. மக்களின் கருத்தைக்கொண்டு  சென்னை மெட்ரோ தற்போது "அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில்மெட்ரோ பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணத் தள்ளுபடி" அறிவித்துள்து . எனவே இனி விடுமுறை நாட்களில் வெளியில் செல்வதற்கு மக்கள் மெட்ரோ ரயிலை அதிகம் பயன்படுத்துவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,