ஐப்பசி அன்னாபிஷேகம்

ஐப்பசி அன்னாபிஷேகம் :



சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம் தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள். அந்த இறைவனின் அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.


ஐப்பசி அன்னாபிஷேகம் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தைப் போலவே, கங்கை கொண்ட சோழபுரத்திலும், மிகப்பிரமாண்டமான சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கமும் ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும். இந்த சிவலிங்கத்தின் சுற்றளவு 60 அடியாகும். 13.5 அடி உயரமும் கொண்டதாகும். இந்த சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 100 மூட்டை பச்சரிசியால் சமைத்த சாதத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம். சமைத்த அன்னத்தை சிவலிங்கத்தின் சாத்தி அபிஷேகம் செய்வதை பார்த்தால் ஏழேழு பிறவிக்கும், நமக்கு சாப்பாட்டிற்கு பிரச்சனை ஏற்படாது என்பது ஐதீகம். \


. சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்படும். இதனால் ஒரே சமயத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இந்த அன்னாபிஷேகத்தை கண்டு வணங்கிச் செல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை கொண்டசோழபுரத்திற்கு வருவார்கள்


. இதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு, கோவில் நிர்வாகத்தினரும், அன்னாபிஷேக குழுவினரும் செய்துள்ளனர்.


    ---மஞ்சுளா யுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,