நயன் மீண்டும் அஜித்துடன்

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு இருக்கும் கேள்வி நயன்தாரா எப்போது திருமணம் செய்து கொள்வார்?.     நயன்தாரா தற்போது தனது காதலனோடு நியூயார்க் சென்றுள்ளார். அப்போது அவருடன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும், அவரது மகள் குஷி கபூரும் இருந்தனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா, போனி கபூர் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, இயக்குநர் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே , பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். நியூயார்க் சந்திப்பைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மை ஆனால், அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,