உலகின் மிக உயரமான சிவலிங்கம்

          உலகின் மிக உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறந்து வைப்பு.....


      இந்தியா புக் ஆப் ரெகார்ட் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்டில் இடம் பெற்ற உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் கேரளாவில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


     தமிழகம் மற்றும் கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் அருகே அமைந்துள்ள செங்கல் என்ற இடத்தில் சிவபார்வதி ஆலயத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் 111 புள்ளி 2 அடி உயரத்தில் சிவ லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


கடந்த 2012 ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகளை 800 பணியாளர்கள் ஆலயத்திலேயே தங்கி நிறைவு செய்தனர். இதை பொது மக்கள் வழிபாட்டுக்கு மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். சிவலிங்கத்தின் உள் பகுதியில் 8 தளங்கள் உள்ளன.


கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும் 7 தளங்களில் 108 சிவலிங்கங்களும் மேல் தளமான 8 வது தளத்தில் கைலாய மலையில் சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிவலிங்கத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,