விரைவில் வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில்..
வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில்..
: சென்னையில் வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான மின்சார ரயில் வழித்தடம் புத்துயிர் பெறுகிறது
. 18 மாதத்தில் மின்சார ரயில் வழித்தடப்பணிகள் முடிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் தாம்பரம்- சென்னை கடற்கரை, வேளச்சேரி - சென்னை கடற்கரை ஆகிய மின்சார ரயில் வழித்தடங்கள் மிகவும் முக்கியமானவை
. இதில் சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடம் 2009 முதல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் அதன்பிறகு சுமார் 11 ஆண்டுகள் ஆகியும் வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான வழித்தட பணிகள் நிறைவு பெறாமல் இருக்கிறது.
2007ம்ஆண்டு பணிகள் துவங்கிய நிலையில் நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வேளச்சேரி- பரங்கி மலை வழித்தடத்தில் புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலைத்திற்கு பணிகள் முடிப்பதில் நிலப்பிரச்சனையால் சிக்கல் நீடித்தது. இந்த பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால் தாம்பரம் கிண்டி வழித்தடத்தில் உள்ள மக்கள் வேளச்சேரி பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றுபவர்கள் பூங்கா ரயில் நிலையம் வந்து மாறிச்செல்லும் நிலை இருந்தது. தற்போது வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான மின்சார ரயில் வழித்தடம் புத்துயிர் பெறுகிறது. பிரச்சினையில் உள்ள 500 மீட்டர் பணிகளை முடிக்க தடையாக இருந்த நிலம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தெற்கு ரயில்வே சரி செய்துவிட்டதால் இன்னும் 18 மாதத்தில் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது
புதிய ரயில்வே லைன் அமைக்க 48.48 கோடி மதிப்பீட்டில் மின்சார ரயில் வழித்தடப்பணிகள் முடிந்து வேளச்சேரி பரங்கிமலை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.. வேளச்சேரி -பரங்கிமலை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டால் சென்னை மக்களின் பயண நேரங்கள் வெகுவாக குறையும். ஐடி பணியாளர்கள் பலரும் மின்சார ரயிலில் இந்த புதிய வழித்தடத்தில் விரைவில் அலுவலகம் செல்வார்கள்.
Comments