இலங்கையின் புதிய அதிபராக  கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்  கோத்தபய ராஜபக்சே   இலங்கை அதிபர் தேர்தல் நேற்று 16/11/2019 நடந்தது.  இதில், இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.


 


  வாக்குப்பதிவு  நேற்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்து பின் 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  இதில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவும், அதிகளவில் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவும் முன்னிலை வகித்தனர்.  இந்த நிலையில், நண்பகல் வரை எண்ணப்பட்ட வாக்குகளில் கோத்தபய ராஜபக்சே 41 லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை (50 சதவீதத்திற்கு மேல்) பெற்றுள்ளார்.  சஜித் பிரேமதாசா 34 லட்சத்திற்கு கூடுதலான வாக்குகளை பெற்று (43 சதவீதம்) உள்ளார்.


 


வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார்.  இதனை அடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாசா ஒப்பு கொண்டார்.  இதனால் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக இன்று மாலைக்குள் முறைப்படி அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.


 


இதனிடையே கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டரில், இலங்கையின் புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் பயணத்தின் பகுதியாக இலங்கை மக்கள் அனைவரும் இருக்கின்றனர் என நினைவில் கொள்ள வேண்டும்.


 


தேர்தல் பிரசாரத்தில் ஒழுக்கம் மற்றும் கண்ணியமுடன் இருந்ததுபோன்று வெற்றியை நாம் அமைதியுடன் கொண்டாடுவோம் என தெரிவித்து உள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,