இது அனன்யா பக்கம்

இது அனன்யா பக்கம்


 


சிரிக்க சிரிக்க மட்டும்,,,,


 பகுதி  (1 )


 



 


 


தட் யூஷுவல் பிருஹஸ்பதி நம்பாத்துக்குள்ளே நுழைஞ்சதும்


மீ: ”என்ன சாப்பிடறே?”


ஹீ: ”எனக்கு எதுவும் வேண்டாம். சுத்தமா வயித்துல இடமே இல்லை! ஒண்ணும் குடுக்காதே”


மீ:”சரி”


கொஞ்ச நேரத்தில்....


 


ஹீ: ”ப்ளாக் டீ இருக்கா?”


மீ:”ப்ளாக் காஃபி தர்றேனே, டிகாக்ஷன் இருக்கு. ஈஸி”


ஹீ: ”சரி எதாவது ஒண்ணு”


ஹீ: ”ஆமா, அந்த டப்பாவுக்குள்ளே ஸ்னாக்ஸ் இருக்கா?”


மீ:”இருக்கே, நவதான்ய மிக்சர் . சாப்பிடறியா?”


ஹீ: ”தா தா.. ”


மீ:”இந்தா நீ வாங்கிண்டு வந்த போளி”


ஹீ: ”அது வேண்டாம். அந்த முந்திரி பக்கோடா எடு”


(அதுவும் ஆச்சு)


ஹீ: ”குடிக்க தண்ணி தா.இல்லே, எலுமிச்சம் பழ ஜூஸே போட்ரு. எலுமிச்சம் பழம் இருக்கா?”


மீ:”ம்ம்” (ஜூஸ் கலந்தாச்சு - குடிச்சும் ஆச்சு)


ஹீ: ”அந்த டப்பால என்ன அப்பளமா? எடு”


மீ: ”இந்தா”


ஹீ: ”எனக்கு ப்ளாக் டீ தான் வேணும்”


ஹீ: ”நீ என்ன பண்ணு, தினோம் நாலு ஐஞ்சு உலர் திராட்சையை தண்ணியில கொதிக்க வைச்சு ஆற விட்டு அந்த தண்ணியை குடி. அரை மணி எதும் சாப்பிடாதே”


மீ:”ஏன்?”


ஹீ: ”லிவருக்கு ரொம்ப நல்லது,


மீ: (திஸ் பேப்பர் ரோஸ்ட்?)


ஹீ: ”நச்சுப்பொருள் எல்லாம் போய்டும், ஹெல்த்தியா இருக்கலாம் ஆமா அந்த அப்பள டப்பாவை உள்ளே கொண்டுபோய் வைச்சுட்டியா, இப்ப்டி கொண்டா”


மீ: ரோலிங் ஐஸ்


ஹீ: ”ரமேஷ் வீட்டுல சாம்பார் எப்பிடி இருக்கும் தெரியுமா? அதும் முள்ளங்கி சாம்பார்!”


மீ:”இன்னைக்கு நம்பாத்துலேயும் முள்ளங்கி சாம்பார் தான் ”


ஹீ: ”சாதம் இருக்கா?”


மீ:”அதுக்கென்ன? எக்கச்செக்கமா இருக்கு. சாம்பார் சாதம் பிசையவா?”


ஹீ: ”வேணாம். கொஞ்சம் போகட்டும். வயிறு திம்முன்னு இருக்கு”


(இருக்காதா பின்னே?)


 


 


Blessed to have such cute souls in life!


---அனன்யா மகாதேவன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,