சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான்

சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான்


திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் 1.12.2019  வெளியிட்ட அறிக்கையில்


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு 10 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது; இதில் 4 நிமிடங்கள் சோதனை செய்வதற்கே போய்விடும்



 


பிரபாகரனோடு மாதக்கணக்கில் பேசியவர்கள், அவரோடு தங்கியிருந்தவர்கள், போராட்ட களத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், போராட்ட களத்தில் உடன் இருந்தவர்கள் வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை. ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள்..


சினிமா எடுக்க நல்ல இயக்குனர் தேவை என்று பிரபாகரன் கேட்டு கொண்டதன் பேரில்தான்  கொளத்தூர் மணி தான் சீமானை தேர்வு செய்து ஈழத்திற்கு அனுப்பி வைத்தார்.. பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம் மட்டும் தான்,அதில் நான்கு நிமிடங்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பான சோதனை செய்வதற்கே போய்விடும், நான் பிரபாகரனை சந்தித்த போதும் அப்படி தான் சந்தித்தேன்..


 


 


இந்த 10 நிமிட சந்திப்பை வைத்து கொண்டு சீமான் அவர்கள் மாத கணக்கில் பிரபாகரனோடு பேசியதாகவும், அவரோடு தங்கியிருந்ததை போலவும், ஆமைகறி சாப்பிட்டதாகவும் கதை சொல்லி வருவது கை தட்டு வாங்குவதை தாண்டி ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதையும், அந்த சந்திப்பின் போது உடன் இருந்த புலிகள் தற்போதும் கனடாவில் இருந்து கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்த பிறகும் அவர் இவ்வாறு பேசிவருவது சரியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்..


தற்போது கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்த போது வைகோ வழக்கம் போல் டெல்லியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார், நாங்களும் சென்னையில் நடத்தினோம். இவர் எதையுமே செய்யவில்லை, மாறாக பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு தமிழகத்தில் இவர் தான் பிரபாகரன் போன்ற தோற்றத்தை கொடுத்து வருகிறார். இவ்வாறு விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,