திருப்பாவை நிகழ்ச்சி
திருப்பாவை நிகழ்ச்சி
மார்கழி மாத பிறப்பையொட்டி (December 17.12.2019)
நாளை செவ்வாய்க்கிழமை
முதல் திருப்பதி கோவில் உள்பட 195 கோவில்களில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது. திருப்பதி கோவிலில் தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கிறது.
ஆனால் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடப்படுகிறது.\
செவ்வாய்க்கிழமை மார்கழி மாதம் பிறப்பதால் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை நிகழ்ச்சி தொடங்குகிறது.
தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வேத விற்பன்னர்களைக் கொண்டு திருப்பாவை பாடப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், வரதராஜ சுவாமி கோவில் உள்பட 195 கோவில்களில் திருப்பாவை நிகழச்சி நடைபெறுகிறது
by manjula yugesh (dubai)
Comments