அமிர்தா ஐயர் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக்கன்னி
தீபாவளியை ஒட்டி வெளியான விஜயின் பிகில் படத்தின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நன்கு அறிந்த முகமானன அமிர்தா ஐயர் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்
உன் அழகு செம தூளு என இவரை வைத்து ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டு மகிழ்ந்து வருகின்றனர். இவர் படைவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், அதற்க்கு முன்னரே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான தெறி படத்தில் சமந்தாவின் தோழியாக வந்திருப்பார். அந்த படத்தில் சமந்தாவை விஜய் வளைகாப்பிற்கு காரில் அழைத்து செல்லும் பொழுது அந்த காரின் பின் இருக்கையில் இவர் அமர்ந்திருப்பது நன்றாகவே தெரியும்
பிகில் படத்தில் தான் இவருக்கென்று தனி அங்கீகாரம் கிடைத்தது என்றே சொல்லலாம். இவரின் புகைப்படங்கள் தான் தற்போது பலரின் ப்ரொபைல் படமாகவே இருக்கிறது.
Comments