ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை  டிசம்பர் 24 - ஆம் தேதி விடப்பட்டது. ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்த நிலையில்,  பள்ளி திறக்கும் தேதியில் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்தது.   உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறதுComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,