ஜார்கண்டில் கோட்டை விட்ட  பாஜக

ஜார்கண்டில் கோட்டை விட்ட  பாஜக



                ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள், இன்று 23.12.2019 வெளியாகி உள்ளன. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆகியவை இணைந்த மகாகத்பந்தன் கூட்டணி 46 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது.


பெரும்பான்மையை நிரூபிக்க 41 தொகுதிகள் போதுமானது என்ற நிலையில் அதை விடவும் அதிகமான தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி உள்ளது. பாஜக கடந்த தேர்தலில் ஒப்பிட்டால் சுமார் 12 தொகுதிகளை இழந்து 25 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.



 


                                    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தனது ஆட்சியை பறிகொடுத்தற்கான காரணங்களை அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


       பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி சூறாவளி சுற்றுப்பயணம் பிரச்சாரங்களை செய்தனர் அதே சமயம் காங்கிரஸ் தரப்பில் அதன் தற்காலிக தலைவர் சோனியா காந்தி பிரச்சாரத்திற்கே செல்லவில்லை.  அவரது உடல்நலப் பிரச்சினை காரணமாகதான் . ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இளம் தலைவர்கள் தான் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அப்படியிருந்தும் பாஜகவுக்கு இது போல ஒரு மாபெரும் பின்னடைவு ஏற்பட என்ன காரணம் என்பது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் கூறக்கூடிய கருத்துக்களை பார்ப்போம்.



       சமீபகாலங்களில் பாஜக  அறுதிப் பெரும்பான்மையோடு, மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம், என்பதாலோ என்னவோ.., தனது கூட்டணிக் கட்சிகளைக் கண்டு கொள்வதில்லை என்ற ஒரு விமர்சனம் சரியே என  நினைக்கத் தோன்றும்  .     மகாராஷ்டிராவில், சிவசேனாவை இப்படி பகைத்தன் வினைவே  காரணமாக அந்த கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதனால் பாஜக கைக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டது.


 


                  ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் தேசிய கட்சியுடன் (ஏஜேஎஸ்யூ) இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது பாஜக. இதில் பாஜக 37 தொகுதிகளை வென்றது. ஏஜேஎஸ்யூ கட்சி 5 தொகுதிகளை வென்றது.


       ஆனால் இந்த சட்டசபை தேர்தலின்போது தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக, கூட்டணியை முறித்துக் கொண்டது பாஜக. 2000மாவது ஆண்டு முதலே இவ்விரு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்த பாஜகவின் வியூகம் பொய்த்தது  மக்கள் நம் பக்கம் என்ற கணிப்பு வீணானது


                பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டதன் விளைவு  எதிர் தரப்பு கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் சிறப்பாக நடந்து கொண்டது


     . காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. கடந்த முறை இவை தனித்து போட்டியிட்டதால்  அது பாஜக கூட்டணிக்கு சாதகமாக மாறியது. ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவை மண்ணில் கவிழ வைத்துவிட்டது.


 


                   பாஜக உட்கட்சி பிரச்சனை ஜார்கண்டில் விசுவரூபம் எடுத்ததை அனைவரும அறிந்தனர் . தேர்தலுக்கு முன்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் ராதாகிருஷ்ணன் கிஷோர், ஏஜேஎஸ்யூ, கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மற்றொரு மூத்த தலைவர் சர்யூ ராய், தனக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்ற கோபத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். அதுவும் முதல்வர் ரகுவர்தாஸ் போட்டியிட்ட ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அவரையே தோற்கடித்தார்.



                     ஜார்க்கண்ட் மாநிலத்தில் 26.3 சதவீதம் பழங்குடி இனமக்கள் வாழ்கிறார்கள். 28 தொகுதிகள் பழங்குடியினருக்கான ஒதுக்கப்பட்டுள்ளன. பழங்குடியினர் மத்தியில் பிரபலமாக உள்ள தலைவரான சிபுசோரன் மகன், ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதே சமயம் , பாஜகவின் முதல்வர் வேட்பாளரான ரகுபர் தாஸ் மீது பழங்குடியினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். காரணம் அவர் பழங்குடியினருக்கு எதிராக கொண்டு வந்த நில கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம். பழங்குடியினர் நிலங்களை விற்பனை செய்யவோ, கையகப்படுத்தவோ முடியாது என்று இருந்த சட்டத்தை மாற்றினார் ரகுபர் தாஸ். அதுமட்டுமின்றி பழங்குடியினரை இரண்டாம் தர மக்கள் போல ரகுபர் தாஸ் நடத்துவதாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தன. சமீபத்தில் கூட குந்தி என்ற பகுதிக்கு ரகுபர் தாஸ் சென்றபோது, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் மீது தனது ஷூவை தூக்கி வீசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். இதுபோன்ற காரணங்கள் பாஜகவுக்கு வேட்டு வைத்து விட்டதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.





 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,