சென்னை மழை பாதிப்பு

செ ன்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு


 


சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், அண்ணாசாலை, கிண்டி, ராமாபுரம், வடபழனி, பாடி, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.


சென்னை மாநகரம் முழுவதும் பெய்த மழையால் சாலைகள் எங்கும் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையின் காரணமாக இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்களிலும்,  9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,