70 திலும் தர்பார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ரஜினி. அந்நாளை அமர்க்களப் படுத்த ரஜினி ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே தனது நட்சத்திர பிறந்தநாளைக் தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடினார் ரஜினிகாந்த். மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் செளந்தர்யா, மருமகன் தனுஷ், பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்கா, வேத், மைத்துனர் ரவிச்சந்தர் உள்ளிட்ட ரஜினியின் குடும்பத்தினர் அந்த பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டனர். ரஜினி ஆரோக்கியத்துடன் வாழ சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
Comments