குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுவதில் அர்த்தமில்லை

     தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள்30/12/2019 நடைபெறுகிறது.  .  இதற்கான பிரசாரம் இன்று மாலை ஓய்ந்தது.

 

           பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான நடிகை கவுதமி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பின் செய்தியாளர்களுக்கு நடிகை கவுதமி அளித்த பேட்டியில், உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்கவே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நல்ல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

 

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடைபெறும் போராட்டங்களால் இந்த தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தோ அல்லது பிரச்சினையோ இல்லை. இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமல் அல்லது வேண்டுமென்றே தவறாக விவகாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

போராட்டங்கள் தவறான புரிதலால் ஏற்பட்டு உள்ளது. தேர்தலுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சட்டம் பற்றி மக்களில் பலர் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். பல்வேறு வளர்ச்சி நிலைகளை கணக்கில் கொண்டே தமிழகம் நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுவதில் அர்த்தமில்லை.  இந்த சட்டம் பற்றி தவறாக சித்தரிக்கப்படுகிறது என அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,