நான் என்ன குழந்தையா

நான் என்ன குழந்தையா


 


 அஜித்துக்கு மகளாக 'என்னை அறிந்தால்" படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர் என சொல்லலாம்
 


அவர் மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அவர் வளர்ந்து பெரிய மனுஷியாகி அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி  அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க...என விடாமல் அட்வைஸ் கொடுக்க மிகுந்த மன வருத்தத்திற்குள்ளான அனிகா தனது நண்பர்கள் வட்டாரத்தில் அஜித் படத்தில் நடித்தது ஒரு குற்றமா... என்னை ஒரு குழந்தை போலவே இன்னும் நினைக்கிறார்களே  என புலம்பி வருகிறாராம். 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,