இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.

ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை  கமல்ஹாசன்



குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம்


 


அரசியலமைப்புச்சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழை இல்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகமே.


 


நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும், திட்டமும்.


 


இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.


 


காந்தியின் 150-வது பிறந்த நாளை, அவர் மறைவு நாளாக மாற்றிவிட்டால் அவர் கனவு கண்ட இந்தியா உருத்தெரியாமல் அழிந்துவிடுமா என்ன?


 


முயன்று  தோற்றவர், மீண்டும் முயல்கின்றனர்.  இது  “பாமா இந்தியாவல்ல” உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க.


 


இனம் இந்தியா விரைந்து இது போன்ற திட்டங்களை நிராகரிக்கும்.


 


எங்கள் தாய்நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதா மஹாக்களுக்கு இது புரிய வேண்டும்.


 


மய்யத்தின் வாதம், இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் கலந்து பசியாறும் சந்தர்ப்பவாதமல்ல.


 


நமக்கு பின்னும் நல்லதே நடக்க வித்திடும் சித்தனைகளை பற்றி தொடரும் பெருங்கூட்டம் நாம். அச்சிந்தனைகளை மய்யம் கொள்ளச்செய்யச்சூளுரை ஏற்றவரே எம் மய்யத்தார்.


 


மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி