மோடி சகோதர் ராமதாஸ் சந்திப்பு

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சந்திப்பு


பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 
முன்னேற்றம் குறித்து பேச்சு


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இளைய சகோதரரும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவருமான திரு.பிரகலாத் மோடி நேற்று 16.12.2019மாலை சந்தித்துப் பேசினார்.  இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதாகும்.


தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அவரை ராமதாஸ் அவர்களும், பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும் வரவேற்றனர். 


தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின்போது, தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதித்தனர். 


 


பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ ( Beti Bachao Beti Padhao) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றை ராமதாஸ் அவர்களிடம் திரு.பிரகலாத் மோடி அவர்கள் வழங்கினார்.


ராமதாஸ் அவர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் திரு.பிரகலாத் மோடி அவர்கள் தெரிவித்தார்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,