பராசக்தி  படம் யாருக்கு சொந்தம்

பராசக்தி  படம் யாருக்கு சொந்தம்


 


 



 


 


 



 


திமுகவின் பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்ற உண்மை இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கான விசாரணை தேசிய பட்டியலின ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.


அந்த இடம் பஞ்சமி நிலம்தான் என்பதற்கான ஆதாரங்களை மூத்த தலித் தலைவரும், பாஜக செயற்குழு உறுப்பினருமான தடா பெரியசாமி வெளியிட்டுள்ளார். அது தொடர்பான பல ஆதார ங்களையும் அவர், தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.


இது ஒருபுறமிருக்க, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடமும், பஞ்சமி நிலம்தான் என்று திருமாவளவன் பேசியது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்று திமுகவினர் மீது பல்வேறு அபகரிப்பு புகார்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளன.


 


திமுகவின் நில அபகரிப்பு ஒருபுறம் இருக்க, அடுத்தவர்களின் கதைக்கு தனது பெயரை கருணாநிதி போட்டுக்கொண்டதாக ஒரு வீடியோ ஆதாரம் சொல்கிறது


 பராசக்தி படத்தின் கதையே கருணாநிதிக்கு சொந்தமானது அல்ல பராசக்தி நாடகமாக பல்வேறு மேடைகளில் நடத்தப்பட்டது என்றும், அதை ஏவிஎம் அதிபர் மெய்யப்பச் செட்டியார் உரிமம் வாங்கி திரைப்படமாக தயாரித்தார் என்ற உண்மையை நடிகர் சிவாஜி கணேசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்போது அது தமிழர்கள் மத்தியில் பரவாமல் பார்த்துக்கொள்ளப்பட்டாலும், இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் நடிகர் சிவாஜி கணேசன் கூறியிருப்பதாவது:-


அந்த காலத்தில் ரத்திரனம், தேவி நாடக சபாவை நடத்தி வந்தார். அவர்கள் பாவலர் பாலசுப்ரன் எழுதிய பராசக்தி என்ற நாடகத்தை நடத்தி வந்தார்கள். அந்த நாடகத்தை என்னுடைய தெய்வம் பி.ஏ.பெருமாள் அவர்களும், ஏவிஎம் அவர்களும், மற்றவர்களும் போய் பார்த்து இருக்கிறார்கள்.


பார்த்துவிட்டு சினிமா எடுப்பதற்காக அதனுடைய ரைட்சை வாங்கி விட்டார்கள். வாங்கி விட்டு வந்த பிறகு இதில் யாரை ஹீரோவாக போடலாம் என்ற பிரச்சனை வந்தது. அப்போது பெருமாள் முதலியார் என்னுடைய பெயரையும் அதில் சொல்லி இருக்கிறார். காரணம் பெருமாள் முதலியார், அவர் சின்ன பிள்ளையாக இருந்ததில் இருந்தே நாடகத்தில் என்னை பார்த்துக் கொண்டே வந்துள்ளார். அவர் பெரிய நாடக ரசிகர்.


இவ்வாறு நடிகர் சிவாஜி கணேசன் கூறியுள்ளார்.


 “1952-ல், கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான 'பராசக்தி' திரைப்படம், தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளனர்.


உண்மை எது பொய் எது தெரியல


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,