நயன்தாராவை கண்டு மயங்கிய தாமரை

நயன்தாராவுக்கு பாஜகவின் அழைப்பு!  


       திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலுக்கு நயன்தாரா இன்று (10.12.2019) சென்றபோது, மிகுந்த மரியாதை தந்திருந்தனர் கோவில் குருக்கள். 
 


தேசிய அளவில் பாஜக மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும், பாஜக பிரமுகரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன்.  முக்கிய பூஜைகள் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார்


. நயன்தாராவும் நரசிம்மனும் அருகருகே அமர்ந்தபடி பூஜைகளில் கலந்துகொண்டபோது  தனது அருகில் இருப்பது பிரபல நடிகை நயன்தாரா என்பதை அறிந்து, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் நரசிம்மன்.              நயன்தாராவும் சகஜமாக நரசிம்மன் குடும்பத்தினரோடு பேசிய போது  நரசிம்மன் அரசியல் ரீதியாக நயன்தாராவிடம்  "உங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். உங்களுக்கான சிறந்த கட்சி பாஜக தான். பாஜகவில் இணைந்த திரைபிரபலங்களுக்கு உரிய மரியாதையை பாஜக தரும். சினிமாவின் புகழை வெறும் நடிப்பு என்பதோடு நிறுத்தி விடாதீர்கள். அந்த புகழை வைத்து சமூகத்தின் நலன்களுக்காகப் பாடுபட வேண்டும். அதனால் அரசியலுக்கு வர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார் நரசிம்மன்.வழக்கமான தனது புன்சிரிப்புடன் நயன்தாரா, நரசிம்மன் கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு , "சூழல் அமையும் போது உங்களிடம் பேசுகிறேன் " என்றார் நயன்தாரா..


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,