இரு சக்கர வாகனம் பின்புறத்தில் ஏறி சென்ற பிரியங்கா
உத்தரபிரதேசத்தில் லக்னோ நகரில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை மற்றும் சமூக ஆர்வலரான சடப் ஜபார் கடந்த 19ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை சந்திக்க உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் (கிழக்கு) பிரியங்கா காந்தி இன்று காரில் சென்றார். அவர் வழியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதுபற்றி பிரியங்கா காந்தி கூறும்பொழுது, சாலையில் என்னை தடுத்து நிறுத்துவதற்கு எந்த விசயமும் இல்லை. இது சிறப்பு பாதுகாப்பு படை விவகாரமும் இல்லை. ஆனால் உத்தரபிரதேச போலீசார் இதில் ஈடுபட்டு உள்ளனர் என கூறினார்.
இதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (வயது 76) கைது செய்யப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி புறப்பட்டு சென்றார். ஆனால் அவரை வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி தொடர்ந்து சென்றார்.
Comments