என் உயிர் போனாலும் சந்தோஷப்படுவேன்

தற்சமயம் என் உயிர் போனாலும் சந்தோஷப்படுவேன் -ஆனந்த கண்ணன்



கிராமியக் கலைகள் மீதான ஆர்வத்தால் சிங்கப்பூரில் குடியேறிய


               சன் டிவி மற்றும் சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பிரபலமான ஆனந்த கண்ணன்., தான் கற்ற பாரம்பர்ய தமிழ்க் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள், கதைகள் வாயிலாக அந்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்


தற்போது . துடும்பு மற்றும் பறை இசைப் பயிற்சிக்காகச் சென்னை வந்துள்ளார்


 


``சன் நெட்வொர்க்ல தொகுப்பாளரா வேலை செய்திட்டிருந்தப்போ, நா.முத்துசாமி ஐயாகிட்ட கூத்துப்பட்டறைப் பயிற்சி எடுத்துள்ளார். அப்போது , கிராமியக் கலைகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு. கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைகளை, அனுபவம் பெற்ற பயிற்சியாளர்களிடம் பல ஆண்டுகளாகக் கற்றுக்கொண்டுள்ளார் .


  சென்னையில பத்து வருஷம் வாழ்ந்த அவர் ஏழு வருஷத்துக்கு முன்பு சிங்கப்பூரில் குடியேறி தான் கற்ற கிராமியக்கலைகளை, `ஆனந்தக் கூத்து' என்ற பயிற்சி அமைப்பின் மூலம் சொல்லிக்கொடுத்து வருகிறார்


. கிராமியக் கலைகளையும், மேடை நாடகக் கலைகளையும் சிங்கப்பூரிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று இலவசமாகவும் சொல்லிக்கொடுக்கிறோம். இதுவரை 85,000 மாணவர்கள் எங்ககிட்ட பயிற்சி எடுத்திருக்காங்க. இதற்காக இரு அமைப்புகளை நடத்திட்டிருக்கேன்.என்கிறார் அவர்


    நம்ம தமிழகத்தில் தோன்றிய கிராமியக் கலைகளை சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி அந்த நாட்டு மக்களுக்கும் பயிற்றுவிக்கிறோம். இந்தப் பணிகள்தாம் இப்போதைய என் அடையாளம். இதில் எனக்கு வருமானம் குறைவாகக் கிடைச்சாலும், அளவில்லா மகிழ்ச்சி கிடைக்குது. , நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலை செய்றப்போ, பலரையும் மகிழ்ச்சிப்படுத்தலாம். அது அந்தத் தருணத்துடன் முடிஞ்சுடும். ஆனா, இப்போ என் குழுவினருடன் நான் செய்ற ஆத்மார்த்தமான மற்றும் அர்த்தமுள்ள பணிகளால், வாழ்நாள் தாண்டியும் என் பெயர் நீண்டகாலம் வாழும். அதனால, தற்சமயம் என் உயிர் போனாலும் சந்தோஷப்படுவேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறும் ஆனந்த கண்ணன், துடும்புப் பயிற்சியில் மும்முரமானார்.


அவருக்கு நமது பாராட்டுதல்கள்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,