ஒலியும் ஒளியும் தொடர்

ஒலியும் ஒளியும் --தொடர்


 


ஒலியும் ஒளியும் தொடர்


பகுதி   ( 3 )


கடவுள் அமைத்து வைத்த மேடை


         சுஜாதா என்ற மலையாள நடிகை தமிழ்பேசி ஒட்டு மொத்த படத்தையே தன் இள தோள்களில் சுமந்தார். அந்த தமிழ் பேசிட ஒருமாதம் சுஜாதா மெனக்கெட்டார் என்பதும் ஒரு கதை. சுஜாதா ஏற்கனவே மலையாளத்தில் நாற்பது படங்களில் தலைகாட்டியிருந்தாலும் அவள் ஒரு தொடர்கதை தான் திரும்புமுனை தந்த படம்.       கதாநாயகி குடும்பத்திற்காக தன் காதலை மட்டுமல்ல, பல இன்னல்களை சந்திக்கிறாள். அவளின் மனவலிமைகளை ஒரு கட்டத்தில் உடைக்கிறது கூட அந்த விகடகவி கதாபாத்திரத்தில் தான். அந்தக் கதாப்பாத்திரமும் அது கதையைத் தூக்கிச் சுமக்கும் விதமும் எல்லாருக்கும் பேவரிட் ஆகியது.


                    கடவுள் அமைத்து வைத்த மேடை கண்ணதாசனின் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாலுவின் குரலில் .கமலின் பாவங்களை பாலு வடித்துளளார் .கலர் படங்கள் வெளியாகி இருந்த நிலையில் கருப்புவெள்ளையில் மீண்டும் ஒரு படம். இதே படம் அந்துலேனி கதா என்று தெலுங்கு பேசியது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு பென்கியல்லி அரவிடஹூவு என்று கன்னடத்தில் கலர் படமாக பேசியது.          சுஜாதா மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட நடிகை என்பதால் அவள் ஒரு துடர் கத என்று டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பாரத் சாம்ஷீர் இயக்கத்தில இந்தப்படம் பெங்காளி மொழியும் பேசியது


                 எல்லா படத்திலும் கமல் அறியப்பட்ட நடிகரானார். அவரின் விகடகவி என்னும் அப்பாவிக் கதாப்பாத்திரம் பேசப்பட்டது. வேலையில்லாத பட்டதாரியாய்... கதாநாயகி சுஜாதாவின் பார்வைக்கு பயந்து, ஸ்ரீப்ரியாவின் காதலில் கரைந்து அதில் இருந்து வெளிவந்து முதற் கச்சேரியாய் காதலியின் திருமண மேடையே கிடைக்க அதையே ஒரு விகடகவியின் பாடலாய் பிள்ளைகள் ரசிக்கும் விதமாய் ஒவ்வொரு குரலுக்கும் கமலின் முகபாவம் பேசப்பட்டது. படாபட்டிடம் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லுவதும் கதாநாயகியை கல்யாணத்திற்கு நிர்பந்தப் படுத்தவும் என்று நிறைய வேலைகள் கொண்ட கதாபாத்திரம் திருப்தியானதாகவும் இருந்ததுகமலுக்கு. அந்த பாடல் தான் இப்போது மட்டுமன்றி எவர்கீரினாக இருக்கும்
 


                   கடவுள் அமைத்து வைத்த மேடை. அரங்கேற்றத்தின் சிறு வெளிச்சத்திற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்பை சுமந்து வந்தாள்  கமலுக்கு அவள் ஒரு தொடர்கதை-லதாசரவணன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,