ஒலியும் ஒளியும் --தொடர்

ஒலியும் ஒளியும் தொடர்


பகுதி   ( 2 )


என்னையாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்'


-               -----------------------------------


 



          மேடம் க்யூரியின் லட்சிய வாழ்க்கையை மேற்கோள் காட்டி தன் காதலை வெளிப்படுத்தும் கதாநாயகன். புற்று நோய் ஆராய்ச்சிக்கு தன் வாழ்க்கையையே பணயம் வைத்து அதனால் தன் காதல் மனைவியை இழந்து வளர்த்து ஆளாக்கியவரின் மகளைத் திருமணம் செய்து கண்ணிழந்து பாதுகாக்க மீண்டும் முதல் மனைவியே நர்ஸாக வரும் கதை அதன்பிறகு சில குழப்பங்களுக்குப் பிறகு கதையின் சுபம் முடிவு. நடுநடுவே வரும் அழகான பாடல்களில் இந்த பதிவு தன் மனைவிதான் நர்ஸ் என்று அறியாத கணவனிடம் பாடும் பாடல். இதே போல் ஒரு கதையோடு 1990களில் பிரபு கூட ஒரு படம் நடித்ததாக நினைவு. ஆனால் நிஜத்தின் முன்னால் நிழல் எடுபடவில்லை என்பதே உண்மை.


    "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் "


 


              நடிகர் திலகம் சிவாஜி,சரோஜாதேவி, சவுகார்ஜானகி நடிப்பில் ஜி.என் வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரிப்பில் பீம்சிங் இயக்கத்தில் 19 ரீலும், 5395 அடி நீளமும் கொண்ட பாலும்பழமும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.


   இந்தப் படம் தொடங்கியதற்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. பெண்ணின் பெருமை படத்தில் ஒருகாட்சியில் சிவாஜி ஜெமினியைச் சுடவேண்டும் ஆனால் படப்பிடிப்பில் தவறுதலாக சிவாஜியின் விரல்கள் விசையை அழுத்த வேலுமணி அவர்களின் காலில் பட்டு ரத்தம் வந்துவிட, அதைக் கண்டு பதறிய சிவாஜிகணேசன் கவலைப்படாதே வேலுமணி அடுத்த படம் நான் உனக்கு செய்கிறேன் கவலைப்படாமல் வா என்று சொல்லியிருந்தார். அதையும் மறவால் முன்பணமோ, சம்பளமோ வாங்காமல் கால்ஷீட் கொடுத்து நடித்த படம் பாலும் பழமும். வேலுமணி


    குறிப்பிட்ட இந்த பாடலை கண்ணதாசன் அவர்கள் எழுதினால் நன்றாக வரும் என்பது தயாரிப்பு தரப்பிலும் எம்.எஸ்.வி தரப்பிலும் தோன்றியது ஆனால் சிவாஜிக்கும் கவிஞருக்கும் சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லை என்பது அரசல் புரசலாக தெரிந்தால் அவர்கள் தயக்கம் காட்டினார்கள். விஷயம் சிவாஜியின் சகோதரர் மூலமாக கண்ணதாசனுக்கு கொண்டு செல்லப்பட அவரும் பாட்டெழுத ஒப்புக்கொண்டார்.


   நண்பர்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். தன் மனைவியை இழந்து ஆனாலும் அவளை மறவால் நிமிடத்திற்கு நிமிடம் நினைக்கும் கணவன் அவனின் மனவலிதாங்காத மனைவியின் பாடலாக இது இருக்கும் முழுக்க முழுக்க காதல் ரசமும், தான் யார் என்று கணவனிடம் சொல்ல முடியாத இயலாமையும், வேதனையும் நிரம்பி வழியவேண்டிய பாடல். கவிஞர் வந்து சிலமணி நேரம் ஆகியும் அவரும் சிவாஜியும் பேசிக்கொள்ளவில்லை ஆனால் என்ன எழுதப்போகிறார் என்ற ஆவலை சிவாஜியின் முகத்தில் கண்ட கவிஞரின் உதடுகள் பிறப்பித்த வரிகள்தான் 'என்னையாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்' என்பது...!



-லதாசரவணன் .


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,