அஜயன் பாலாவின் தமிழ் சினிமா வரலாறு

 


அஜயன் பாலாவின் தமிழ் சினிமா வரலாறு


    எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா தமிழ் சினிமா வரலாறு பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்


. இவர் சரத்குமார், சேரன் நடித்த சென்னையில் ஒருநாள், உதயநிதி, ஹன்சிகா நடித்த மனிதன், பிரபுதேவா நடித்த லட்சுமி உட்பட பல்வேறு படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்


            தற்போது இவர்அமீர்ன் நாற்காலி, கிரிமினல் உட்பட சில படங்களுக்கு எழுதி வருகிறார்


   மதராசபட்டினம் உட்பட சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சிஷ்யன் படத்தில் சிக்கலான கேரக்டர்... கலக்கப் போகிறார்


நடிக நிலம் என்ற நடிப்பு பயிற்சிப் பள்ளியை சென்னையில் நடத்தி வரும் இவர், தமிழ் சினிமா வரலாறு பற்றி விரிவான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.


    இந்தப் புத்தகம் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்த அவர் அந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், நடிகர்கள் சிவகுமார், நாசர் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர் உனவும் தெரிவித்துள்ளார்


       இந்தப் புத்தகம் பற்றி அஜயன் பாலா கூறும்போது, தமிழ் சினிமா வரலாறு பற்றிய முழுமையான புத்தகமாக இது இருக்கும். இதற்கு முன் வந்திருக்கும் புத்தகங்களில் கட்டுரைகள்தான் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இது, சுதந்தரத்துக்கு முந்தைய காலகடத்தில் நடித்த நடிகர்கள், அவர்கள் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்  1916-ல் இருந்து தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தொகுத்திருக்கிறேன். மவுன சினிமா காலகட்டத்தில் வந்த தமிழ்ப் படங்கள், அந்த படங்கள் பற்றிய விரிவான தகவல்கள், அடுத்து சினிமா பேசியபோது நடந்த மாற்றங்கள், விடுதலைக்கு முன் தமிழ் சினிமா உட்பட பல அறியப்படாத தகவல்கள் இதில் உள்ளன. நான்கரை ஆண்டுகள் இந்த புத்தகத்துக்காக கடந்த நான்கரை ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். தமிழ் சினிமாவுக்கு இது முக்கியமான புத்தகமாக இருக்கும் என்கிறார்


   இத அவருடைய  நாதன் பதிப்பகம் சார்பாக வெளியிடப்படுகிறது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,