தோனி  மாஸ்

தோனி  மாஸ் லுக்    இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி    ஜார்கண்ட் மாநிலத்தில் 12.12.2019  நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப் போட்டு அசத்தினார் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது


. டிசம்பர் 12 ஆம் தேதி  மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 17 தொகுதிகளுக்கு நடைபெற்றது. ராஞ்சி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றன. மற்ற தொகுதிகளில், மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடிக்கு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வருகை தந்திருந்தார். அவரது சொந்த ஊர் என்பதால் அவருக்கான வாக்குரிமை அந்த நகரத்தில்தான் இருக்கிறது. அத்துடன் அவரது மனைவி சாக்ஷிக்கும் வாக்குரிமை அங்கு உள்ளதால் இருவரும் ஜோடியாக வந்து இருந்தனர். இருவரும் வாக்களித்து விட்டு வெளியே வரும்போது கூடியிருந்த ரசிகர்கள் தோனியை பார்த்து வாழ்த்து கோஷமிட்டனர். அவர்களை தனது டிரேட் மார்க் சிரிப்பால் மகிழ்வித்த தோனி, கையை அசைத்து விட்டு சென்றார். தோனி மற்றும் சாக்ஷி இருவருமே கூலிங் கிளாஸ் அணிந்தபடி வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்தனர். தோனி அணிந்திருந்த டீசர்ட்டில் இரண்டு பெரிய பாக்கெட்டுகள் வித்தியாசமாக இருந்தன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,